தீபாவளியை முன்னிட்டு அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை!! குடிமகன்கள் அதிர்ச்சி!!

தமிழகத்தில் தீபாவளி போன்ற முக்கிய பண்டிகை நாட்களில் டாஸ்மார்க் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.இதேபோன்று, இந்த ஆண்டும் தீபாவளியை முன்னிட்டு டாஸ்மார்க் கடைகளுக்கு விடுமுறை விடப்படும் என அரசு அறிவித்துள்ளது.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த மாதம் (அக்டோபர்) 28, 29, 30 ஆகிய மூன்று நாட்களும் டாஸ்மார்க் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மதுபான விற்பனையில் அரசு பெரிய அளவில் பொருளாதாரத்தை ஈட்டினாலும், இதில் சில கட்டுப்பாடுகளையும் விதிக்க அரசு முடிவு எடுத்துள்ளது.3,698 கோடி ரூபாய் பணம் சராசரியாக ஒரு மாதத்திற்கு மதுபான விற்பனையில் கிடைக்கும் தொகையாகும்.மேலும், இந்த மூன்று நாட்களில் அரசு மதுபான கடைகள் இன்றி பெரிய பெரிய ஹோட்டல்களில் மதுபான விற்பனை நடைபெற்றால் அந்த ஹோட்டலின் உரிமை ரத்து செய்யப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.குடியரசு தினம் சுதந்திர தினம் காந்தி ஜெயந்தி உள்ளிட்ட தினங்களில் மட்டுமின்றி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுபான கடைகளுக்கு அரசு விடுமுறை அளித்துள்ளது.

Share this content:

Post Comment

You May Have Missed