திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு: பழங்குடி போராளி பிர்சாமுண்டா பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு வட்டம் ஸ்ரீகாவேரிராஜப்பேட்டை கிராமத்தில் பழங்குடி போராளி பிர்சாமுண்டா அவர்களின் 150-வது பிறந்தநாள் விழா தமிழ்த்தேச பழங்குடி முன்னணி மாநில இளைஞர் அணி தலைவர் என்.கே. டில்லிராஜா மற்றும் மாநில அமைப்பாளர், சமூக சேவகர் டாக்டர் D. கோபிநாத் தலைமையில் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில், தமிழ்த்தேச பழங்குடி முன்னணி நிறுவனத் தலைவர் நை.க. ஏகாநந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மேலும், உதவும் உறவுகள் அறக்கட்டளை, பள்ளிப்பட்டு ஒன்றியத் தலைவர் சொ. புவனேஸ்வரி, 3வது வார்டு உறுப்பினர் N.V. நீலவேணி விநாயகம், A.M. பற்குணம், V.N. பழனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பிர்சாமுண்டா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர். விழாவின் இறுதியில் இனிப்புகள் வழங்கப்பட்டு நிகழ்ச்சி சிறப்பாக நிறைவு பெற்றது.

Share this content:

Post Comment

You May Have Missed