திருப்பூர் வடக்கு மாவட்டத்தில் புதிய வாக்காளர் சேர்ப்பு முகாம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது

தலைமைக் கழக அறிவிப்பின் அடிப்படையில், திருப்பூர் வடக்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் செயலாளர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினரான மரியாதைக்குரிய க. செல்வராஜ் எம்எல்ஏ அவர்களின் நேரடி மேற்பார்வையில், 16.11.2024 சனிக்கிழமை காலை 9:40 மணிக்கு, 36.வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் புதிய வாக்காளர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது. நிகழ்வின் முக்கிய பங்கேற்பாளர்கள் திரு. மு. நாகராசன், திருப்பூர் தெற்கு மாநகர கழக செயலாளர் மற்றும் அகில இந்திய தொழிலாளர் முன்னேற்ற சங்க துணைத் தலைவர் மியாமி ஆ. ஐயப்பன், கருவம்பாளையம் பகுதி செயலாளர் 37.வது வட்டக் கழக செயலாளர் ரவி (ராமகிருஷ்ணன்) தெற்கு மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் கு. அரவிந்த்தெற்கு மாநகர மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் ராயபுரம் அமுதா தொழிலாளர் முன்னேற்ற சங்க மாநில பொதுச் செயலாளர் டாப்சா ஆறுமுகம். ஆய்வு செய்யப்பட்ட பகுதிகள் 1. பாகமன் 58: காதர் பேட்டை, எம்.ஜி.ஆர் காலனி 2. பாகம் எண் 71: மிலிட்டரி காலனி 3. பாகம் எண் 74: சாயப்பட்டறை வீதி, பெட்டி செட்டிபுரம் 4. பாகம் எண் 75: சின்னா நகர், அருந்ததியர் காலனி 5. பாகம் எண் 76: அணை மேடு, அருந்ததியர் காலனி நியமிக்கப்பட்ட பாக முகவர்கள் எஸ். சாகுல் ஹமீது (ஆட்டோ) பி. பரமேஸ்வரி எஸ். சாரதா அ. ராமசாமி (ஆட்டோ) சி. முருகன் (அணை மேடு) செயல்பாடுகள் மற்றும் ஆய்வுகள்முகாமின் ஒரு பகுதியாக, பாகம் எண் 71, ஜெய் வாபாய் பள்ளி வளாகத்தில் புதிய வாக்காளர் சேர்ப்பதற்கான பணிகள் மதிப்பாய்வு செய்யப்பட்டன. முகவர்களின் ஒத்துழைப்புடன், மக்கள் பங்கேற்பை அதிகரிக்க வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. இந்த நிகழ்வு, மக்கள் வாக்குரிமையை உறுதிப்படுத்தவும், வாக்காளர் அடையாள அட்டைகள் சரியாகப் பதிவு செய்யவும் உறுதுணையாக அமைந்தது. சமூக முன்னேற்றம் மற்றும் மக்களுடன் தொடர்பு கொண்டு நடத்தப்பட்ட இந்நிகழ்வு திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல்பாடுகளை மேலும் உயர்த்துகிறது.

Share this content:

Post Comment

You May Have Missed