திருப்பூர் பூண்டி சிக்னலில் விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்ட ஊடக கனி நல சங்கம் – உதவியால் உயிர் தப்பிய இளைஞர்!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி ரோட்டில் உள்ள பூண்டி சிக்னல் அருகே, வேகமாக வந்த வண்டி ஓட்டுநர் கௌதம் (வயது 20) மற்றொரு வண்டியுடன் மோதாமல் தவிர்க்கும் முயற்சியில் வேகத்தை குறைத்தபோது, நிலைதடுமாறி கீழே விழுந்து முகம், கை, கால்களில் படுகாயம் அடைந்தார்.அந்த தருணத்தில் அதே வழியாக சென்ற ஊடக கனி நல சங்க உறுப்பினர்கள் வடிவேல் மற்றும் சிவப்பிரகாசம் ஆகியோர் முதலில் உடனடியாக உதவிக்கு ஓடி வந்தனர். பின்னர் மாவட்ட செயலாளர் லாரன்ஸ் அவர்கள் இணைந்து காயமடைந்த இளைஞரை பாதுகாப்பாக ஓரமாக வைத்து 108 ஆம்புலன்ஸை அழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த நிகழ்வில் ஊடக கனி நல சங்கம் காட்டிய விரைந்து செய்த மனிதாபிமான உதவிக்கு சமூகத்தில் பாராட்டுகள் வெளிப்பட்டுள்ளன. “நமக்கு தெரிந்தவரா தெரியாதவரா என்கிற கேள்வி இல்லை, ஒருவருக்கொருவர் உதவுவதில் மகிழ்ச்சி காணலாம்” என சங்கம் தெரிவித்துள்ளது.

Share this content:

Previous post

தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச் சங்கம் ஆலோசனை கூட்டம் – ஏப்ரல் 10 ஆர்ப்பாட்டத்திற்கான முடிவுகள்.

Next post

திருத்தணி நியூ ஈடன் ஆங்கில பள்ளி 20ஆவது ஆண்டு விழா எழுச்சியுடன் நடைபெற்றது.

Post Comment

You May Have Missed