திருக்கோவிலூரில் தீ விபத்தால் வீட்டை இழந்த குடும்பத்தாருக்கு ரோட்டரி சங்கம் சார்பில் நிவாரணம் உதவி.
கள்ளக்குறிச்சி மாவட்டம் , திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட தாசார்புரம் பகுதியில் வசிப்பவர்கள் ராஜா,பார்வதி தம்பதியினர். முதியவர்கள் ஆன இவர்கள் கூரை வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு ராஜா டீ போடுவதற்காக சிலிண்டரை ஆன் செய்து பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சிலிண்டரின் நுழைவு வாயில் எரிவாயு கசிவை ஏற்பட்டு தீப்பற்றி அவர்களது வீடு சேதம் அடைந்தது.இதனைத் தொடர்ந்து திருக்கோவிலூர் ரோட்டரி சங்கம் சார்பில் ரோட்டரி சங்கத் தலைவர் செந்தில்குமார் தலைமையில் வீட்டை இழந்த குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி ரூபாய்.1,000 பணம் மற்றும் அரிசி, மளிகை, பொருட்கள், துணி பாய் உள்ளிட்ட 5,000 ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை வழங்கினர். இந்த நிகழ்வில் முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவர் வாசன் , செயலாளர் கோத்தம்சந்த், பொருளாளர் சௌந்தரராஜன், ரோட்டரி சங்க உறுப்பினர் முத்துக்குமாரசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Share this content:
Post Comment