தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச் சங்கம் ஆலோசனை கூட்டம் – ஏப்ரல் 10 ஆர்ப்பாட்டத்திற்கான முடிவுகள்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர் நலச் சங்கம் சார்பில் சென்னை திருவெற்றியூரில் நேற்று (01/04/2025) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஏப்ரல் 10ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.ஆர்ப்பாட்ட ஆயத்த கூட்டம்:இந்த ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற, மாநில பொதுச் செயலாளர் K.குமார் தலைமையில் திருவெற்றியூர் மற்றும் எண்ணூர் பகுதி தோழர்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். சிறப்புத் தலைவராக கு.பாரதி வழிகாட்டுதல் வழங்கினார்.முக்கிய முடிவுகள்:திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மாநில, மண்டல, பகுதி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டது.திருவெற்றியூர் பகுதியில் டாஸ்மாக் ஊழியர்கள் சமூக விரோத கும்பல்களால் அச்சுறுத்தப்படுவது குறித்து சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க தொழிற்சங்க கூட்டமைப்பு முடிவு செய்தது.பகுதியில் உள்ள அனைத்து தொழிலாளர்களையும் ஒன்றிணைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச் சங்கம்.

Share this content:

Post Comment

You May Have Missed