Loading Now

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தலின்போது பாஜக பெற்ற நன்கொடை ரூ.1,473 கோடி

புதுடெல்லி: தமிழ்​நாடு, மேற்கு வங்​கம், அசாம், புதுச்​சேரி, கேரளா ஆகிய 5 மாநிலங்​கள்​, யூனியன் பிரதேச சட்​டப்​பேர​வைத் தேர்​தல்​களின் போது பாஜக​வின் மத்​தி​யத் தலைமை அலு​வல​கத்​துக்​குக் கிடைத்த மொத்த நன்​கொடை ரூ.1,472.8 கோடி என தேர்​தல் ஆணை​யத்​திடம் பாஜக தாக்​கல் செய்​துள்ள அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

தமிழ்​நாடு, அசாம் மற்​றும் புதுச்​சேரி சட்​டப்​பேர​வைத் தேர்​தல்​களுக்​கான பாஜக செல​வின அறிக்​கையை தேர்​தல் ஆணை​யம் தனது இணை​யதளத்​தில் வெளி​யிட்​டுள்​ளது. இதன்​படி, தேர்​தல் நடவடிக்​கைகள் தொடங்​கிய கடந்த மார்ச் 15, 2026 அன்று பாஜக​வின் வங்கி இருப்​புத் தொகை ரூ.6,722.6 கோடி​யாக இருந்​தது. இந்​நிலை​யில், தேர்​தல் முடிவடைந்த மே 6, 2026-ல் அதன் வங்கி இருப்பு ரூ.7,627.2 கோடி​யாக உயர்ந்​துள்​ளது.

அசாமில் அதி​கபட்ச செலவு: பாஜக​வின் மத்​தி​யத் தலைமை அலு​வல​கம், மாநில மற்​றும் மாவட்ட அமைப்​பு​கள் இணைந்து அசாம், தமிழ்​நாடு மற்​றும் புதுச்​சேரி தேர்​தல்​களில் மொத்​தம் ரூ.160 கோடியைச் செல​விட்​டுள்​ளன. இதில் அதி​கபட்​ச​மாக அசாம் மாநிலத்​தில் ரூ.96.3 கோடி​யும், தமிழகத்​தில் ரூ.51.6 கோடி​யும், புதுச்​சேரி​யில் ரூ.11.9 கோடி​யும் செல​விடப்​பட்​டுள்​ளது.

இதில் கட்​சிப் பிரச்​சா​ரத்​துக்​காக ரூ.130.4 கோடி​யும், விளம்​பரங்​களுக்​காக ரூ.29.6 கோடி​யும் செல​விடப்​பட்​டுள்​ளது.

Share this content:

You May Have Missed