Loading Now

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர்: கால் இறுதி சுற்றில் அல்கராஸ் அதிர்ச்சி தோல்வி

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்​னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்​றில் நடப்பு சாம்​பிய​னான ஸ்பெயினின் கார்​லோஸ் அல்​க​ராஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்​தார்.

அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகரில் நடை​பெற்று வரும் இந்​தத் தொடரின் 10-வது நாளான நேற்று முன்​தினம் ஆடவர் ஒற்​றையர் பிரிவு கால் இறுதி சுற்​றில் நடப்பு சாம்​பிய​னும், 2-ம் நிலை வீரரரு​மான ஸ்பெ​யினின் கார்​லோஸ் அல்​க​ராஸ், 8-ம் நிலை வீர​ரான அமெரிக்​கா​வின் பென் ஷெல்​ட​னுடன் மோதி​னார்.

டைபிரேக்​கர் வரை சென்ற முதல் செட்டை அல்​க​ராஸ் 7-6 (7-5) என கைப்​பற்​றி​னார். எனினும் அடுத்த 2 செட்​களை​யும் அவர் 1-6, 3-6 என இழந்​தார். தொடர்ந்து 4-வது செட்​டில் மீண்​டெழுந்து முழு​மை​யாக ஆதிக்​கம் செலுத்​திய அல்​க​ராஸ் 6-1 என தன்​வசப்​படுத்​தி​னார். இதனால் கடைசி செட் பரபரப்​பானது.

டைபிரேக்​கர் வரை சென்ற இந்த செட்டை அல்​க​ராஸ் 6-7 (7-10) என இழந்​தார். முடி​வில் 4 மணி நேரம் 28 நிமிடங்​கள் நடை​பெற்ற இந்த மோதலில் கார்​லோஸ் அல்​க​ராஸ் 7-6 (7-5), 1-6, 3-6, 6-1, 6-7 (7-10) என்ற செட் கணக்​கில் அதிர்ச்சி தோல்வி அடைந்​தார்.

மற்​றொரு கால் இறுதி ஆட்​டத்​தில் 11-ம் நிலை வீர​ரான அமெரிக்​கா​வின் பிரான்​செஸ் தியா​போ, சகநாட்​டைச் சேர்ந்த 46-ம் நிலை வீர​ரான அலெக்ஸ் மைக்​கேல்​சனை எதிர்​கொண்​டார். இதில் முதல் 2 செட்​களை​யும் பிரான்​செஸ் தியாபோ 5-7, 3-6 என இழந்​தார். எனினும் அடுத்த 2 செட்​களி​லும் ஆக்​ரோஷ​மாக செயல்​பட்டு 7-5, 6-3 என தன்​வசப்​படுத்​தி​னார் தியா​போ.

இதனால் வெற்​றியை தீர்​மானித்த கடைசி செட் ஆட்​டம் பரபரப்​பானது. டைபிரேக்​கர் வரை சென்ற இந்த செட்டை தியாபோ 7-6 (10-6) என கைப்​பற்​றி​னார். முடி​வில் 4 மணி நேரம் 39 நிமிடங்​கள் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் பிரான்​செஸ் தியாபோ 5-7, 3-6, 7-5, 6-3, 7-6 (10-6) என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார். அமெரிக்க ஓபன் தொடரில் தியாபோ அரை இறு​திக்கு முன்​னேறு​வது இது 3-வது முறை​யாகும். அவர், 2022 மற்​றும் 2024-ம் ஆண்டு தொடர்​களி​லும் அரை இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​யிருந்​தார்.

மகளிர் ஒற்​றையர் பிரிவு கால் இறுதி சுற்​றில் முதல் நிலை வீராங்​க​னை​யும், நடப்பு சாம்​பிய​னு​மான பெலாரஸின் அரினா சபலென்​கா, 6-ம் நிலை வீராங்​க​னை​யான செக் குடியரசின் லின்டா நோஸ்​கோ​வாவை எதிர்​கொண்​டார். இரு​வ​ரும் சமபலத்​துடன் மோதி​ய​தால் முதல் செட் டைபிரேக்​கர் வரை சென்​றது. எனினும் சபலென்கா கடுமை​யாக போராடி இந்த செட்டை 7-6 (7-1) என கைப்​பற்​றி​னார். 2-வது செட்​டில் பதிலடி கொடுத்த லின்டா நோஸ்​கோவா 6-3 என தன்​வசப்​படுத்​தி​னார்.

இதனால் வெற்​றியை தீர்​மானித்த 3-வது செட் டைபிரேக்​கருக்கு சென்​றது. இதில் சாதுரிய​மாக செயல்​பட்ட அரினா சபலென்கா 7-6 (10-7) என்ற செட் கணக்​கில் கைப்​பற்​றி​னார். முடி​வில் சபலென்கா 7-6 (7-1), 3-6, 7-6 (10-7) என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார்.

மற்​றொரு கால் இறுதி ஆட்​டத்​தில் 3-ம் நிலை வீராங்​க​னை​யான அமெரிக்​கா​வின் ஜெசிகா பெகுலா 3-6, 6-4, 6-3 என்ற செட் கணக்​கில் சகநாட்​டைச் சேர்ந்த 26-ம் நிலை வீராங்​க​னை​யான எம்மா நவர்​ரோவை வீழ்த்தி அரை இறுதி சுற்​றில் நுழைந்​தார்.அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் கால் இறுதி ஆட்டத்தில் 6-ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் லின்டா நோஸ்கோவாவுக்கு எதிராக ஆக்ரோஷாக விளையாடிய முதல் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா.

Share this content:

You May Have Missed