டிஜிட்டல் சவுத் டிரஸ்ட் நலத்திட்ட முகாம் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு மாநிலத் தலைவர் திரு. எஸ்.ஜி. கேசவ் மற்றும் தலைமை செயல் அதிகாரி திரு. எஸ். ஸ்ரீனிவாசன் தலைமையில் செயல்பட்டு வரும் டிஜிட்டல் சவுத் டிரஸ்ட், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, திருவள்ளூர் மாவட்டத் தலைவர் குமரேசன் தலைமையில் கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஏழை மற்றும் எளியவர்களுக்கு இலவச கண் சிகிச்சை அளிக்கப்பட்டதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு டிஜிட்டல் சவுத் டிரஸ்ட் மூலமாக கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில் டிஜிட்டல் சவுத் டிரஸ்ட் உறுப்பினர்களான பிரபாகரன், கே. சதீஷ்குமார், லாகக்குமார் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Share this content:

Post Comment

You May Have Missed