சொற்பொழிவு மற்றும் பரிசளிப்பு விழா
விருதுநகர், அம்பாள் ராமசாமி புஷ்பமணி அறக்கட்டளை வழங்கும் மாபெரும் சிறுகதை போட்டிக்கான பரிசளிப்பு விழா அம்பாள் ராமசாமி புஷ்பமணி அரங்கத்தில் அம்பாள் முத்துமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வரலாற்றின் வெளிச்சம், சுதந்திர இந்தியாவின் முந்தைய நூற்றாண்டுகளின் வரலாற்றுப் பதிவுகள் என்ற தலைப்பில் சாகித்திய அகாதமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் சொற்பொழிவு நடைபெற்றது. பின்னர் சிறுகதை போட்டியின் பரிசளிப்பாக 320 சிறுகதைகளில் 15 சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ரொக்க பரிசம் நினைவு பரிசும் வழங்கப்பட்டது. இதில் மதுரையைச் சேர்ந்த ஆசிரியரும் சமூக ஆர்வலருமான நூருல்லாவின், கதையான மரணத்தில் ஒரு பாதை, தேர்ந்தெடுக்கப்பட்டு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் கைகளால் ரொக்க பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது. விழா நிறைவாக நன்றியுரையினை ஜே சி ஐ விருதுநகர் தலைவர் பிரபாகரன் அவர்கள் கூறினார்.
Share this content:
Post Comment