செவிலியர் நேர்காணல்; நவ.,11க்கு ஒத்திவைப்பு
கோவை மாநகராட்சியில் காலியாக உள்ள நகர சுகாதார செவிலியர் மற்றும் செவிலியர் பணியிடங்களுக்கான நேர்காணல், மழை காரணமாக, நவ., 11க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில், 54 நகர சுகாதார செவிலியர்கள் மற்றும், 10 செவிலியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.இப்பணியிடங்களை பூர்த்தி செய்ய, 18ம் தேதி நேர்காணல் நடைபெறுவதாக இருந்தது. பருவ மழை பெய்து வருவதால், நவ., 11க்கு ஒத்திவைத்திருப்பதாக, மாநகராட்சி அறிவித்திருக்கிறது.இதுதொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கோவை மாநகராட்சி பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது.வானிலை எச்சரிக்கை செய்யப்பட்டு இருப்பதால், நேர்காணலுக்கு பங்கேற்க வருவோரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ஒப்பந்த அடிப்படையில், செவிலியர் பணியிடங்களுக்கான நேர்காணல், நவ., 11க்கு ஒத்திவைக்கப்படுகிறது. அன்றைய தினம் காலை, 10:00 முதல் மதியம், 2:00 மணி வரை நடைபெறும்’ என தெரிவித்துள்ளார்.
Share this content:
Post Comment