செய்தி வெளியீடுசங்க கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இன்று நம்முடைய சங்கத்தின் கூட்டம், முன் அறிவித்தபடி காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. மாநிலத் தலைவர் திரு. S.V. கனிராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், திருப்பூர் மாவட்ட தலைவர் திரு. ராஜன் சுப்புராஜ், மாவட்ட செயலாளர் திரு. லாரன்ஸ் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட சுமார் 15 பேர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். கூட்டம் சுமார் 3 மணி 30 நிமிடங்கள் தொடர்ந்தது.கூட்டத்தில் சங்கத்தின் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர். சிலர் தவிர்க்க முடியாத காரணங்களால் வர முடியாமல், தங்களது வருகையின்மையை அலைபேசி மூலம் தெரிவித்தனர்.இக்கூட்டத்தின் போது சங்கத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி பல்வேறு கருத்துகள் பரிமாறப்பட்டன. சில கருத்துகள் விவாதத்திற்குரிய முக்கியத்துவம் பெற்றிருந்தன; சில கருத்துகள் சிறிய அளவில் சலசலப்பையும் ஏற்படுத்தின.இந்த சூழலில், மாநிலத் தலைவர் திரு. S.V. கனிராஜ் அவர்கள் அனைத்துக் கருத்துக்களையும் தெளிவாக விளக்கி, உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கு விடையளித்து, தெளிவுரை வழங்கினார்.மேலும், வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி சித்திரைத் திருநாளையொட்டி, சங்க உறுப்பினர்கள் அனைவரின் புகைப்படங்களுடன் போஸ்டர்கள் தயாரிக்கப்பட்டு ஒட்டப்படும் என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.— சங்க செய்தித் துறை
Share this content:
Post Comment