சென்னை சாம்சங் தொழிலாளர் போராட்டத்திற்கு ஆதரவு ஆர்ப்பாட்டம் திருப்பூரில் நடைபெற்றது.

சென்னை சாம்சங் தொழிலாளர் போராட்டத்திற்கு ஆதரவாகவும், சங்கம் அமைக்கும் உரிமையை பறிக்காதே.. ஜனநாயக ரீதியான போராட்டங்களை ஒடுக்காதே.. உள்பட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும் இன்று காலை 11 மணியளவில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம். தமிழ்நாடுவிவசாயிகள் சங்கம், அகிலஇந்திய விவசாய தொழிலாளர் சங்கம் திருப்பூர்மாவட்டக்குழுக்கள் சார்பில் நடைபெற்றது. போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் தலைமை வகித்தார். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ஏ.சண்முகம் முன்னிலை வகித்தார். சிஐடியு மாநில குழு உறுப்பினர் ஜி.சம்பத், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் செ.மணிகண்டன், இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் ஜி.எஸ்.கல்கிராஜ், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட துணைத் தலைவர் பா.லட்சுமி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் அ.பாலதண்டபாணி, அ.இ.வி.தொ‌.ச மாவட்ட செயலாளர் அ.பஞ்சலிங்கம், த.வி‌.ச. மாவட்ட செயலாளர் ஆர்.குமார் ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள்.

Share this content:

Post Comment

You May Have Missed