குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள் பெற்றோர்களுக்கு நகர் மன்த் தலைவர் வேண்டுகோள்.

திருத்துறைப்பூண்டி தி மாடர்ன் நர்சரி பிரைமரி பள்ளியின் 19-வது ஆண்டு விழா மற்றும் 12 வது பட்டமளிப்பு விழா நேற்று திருத்துறைப்பூண்டி கல்யாண மண்டபத்தில் வெகு சீறும் சிறப்புமாக நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் நூலகர் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் அறிவழகன், நகர்மன்ற உறுப்பினர் மின்னல்கொடி பாலகிருஷ்ணன், ராய் டிரஸ்ட் நிறுவனத் தலைவர் முனைவர் துரை ராயப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆலோசனைக்குழு உறுப்பினர் பொறியாளர் செல்வகணபதி,கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் பிரபா ஜவஹர்,பாரத மாதா தொண்டு நிறுவனங்களின் நிறுவனர் எடையூர் மணிமாறன் ஆகியோர் போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசளித்து சிறப்புரையாற்றினர்.விழாவில் 50 யு கே ஜி மாணவர்களுக்கு பட்டமளித்து நகர் மன்றத்தலைவர் திருமதி. கவிதா பாண்டியன் பேசும் போது ” பெற்றோர்கள் தனது குழந்தைகளுடன் மற்ற குழந்தைகளை ஒப்பிட்டு பேச கூடாது. ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு திறமையுடன் பிறக்கின்றனர். நாம் நம் குழதைகளுக்கு பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என வழிகாட்ட வேண்டும். நீங்கள் செய்வதை அப்படியே பின்பற்ற நினைக்கும் குழந்தைகளுக்கு நாம் சரியான முறையில் வாழ்ந்து காட்ட வேண்டும் என்றார். முன்னாள் ரோட்டரி சங்கத்தின் தலைவர் காளிதாஸ், லயன்ஸ் சங்க செயலாளர் பாலகிருஷ்ணன், பொருளாளர் ரகுராமன், பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் விஜயராஜ், பொருளாளர் மேஜிக் அகிலன், கராத்தே முத்துக்குமார், மு.நகர்மன்ற உறுப்பினர் மாயா, நேஷனல் பள்ளி தாளாளர் விவேகானந்தன், பள்ளி புரவலர்கள் கார்த்திகா அருள், மெஸ்சி விஜயபாஸ்கர், ஆசிரியர்கள் ஹேமா அருளரசு ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் தீபா ராணி வரவேற்பு உரையாற்றினர். ஆனந்தம் கல்வி அறக்கட்டளை துணைத் தலைவர் ஆசிரியர் மணிமலர் நன்றியுரையா ற்றினார். ஆனந்தம் கல்வி அறக்கட்டளை நிறுவனர் முருகானந்தம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். பள்ளி ஆசிரியைகள் வீர குமாரி, திவ்யா, அபிராமி ஆகியோர் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர்.

Share this content:

Previous post

ஆசிரியர் பணி நிறைவு மற்றும் பாராட்டு விழாவின் போது.

Next post

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் முதன்முறையாக அரசு பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி.

Post Comment

You May Have Missed