குடியாத்தம்: விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தல்!

விவசாயிகள் குறைத் தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வட்டாட்சியர் மெர்லின் ஜோதிகா தலைமை தாங்க, வேளாண்மை துறை உதவி இயக்குனர் உமாசங்கர் முன்னிலை வகித்தார். துணை வட்டாட்சியர் உதயகுமார் வரவேற்றார்.விவசாயிகள் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள்:  – உழவர் சந்தைக்கு கூடுதல் இடம் ஒதுக்கீடு: குடியாத்தம் பகுதியில் உள்ள உழவர் சந்தையின் பயன்பாட்டிற்காக அதிக இடம் ஒதுக்க வேண்டும்.  – கால்நடை சந்தை அமைப்பு: கால்நடை சந்தைக்கு பொருத்தமான இடம் தேர்ந்தெடுத்து அமைக்க வேண்டும்.  – பேருந்து வசதி:  – குடியாத்தம் முதல் மாதனூர் வரை.    – குடியாத்தம் முதல் அகரம்சேரி வரை.  -செருவங்கி ஏரி தூர் நீக்கம்: ஏரியின் கால்வாய்களை சுத்தம் செய்து நீர்ப்பாசன வசதி மேம்படுத்த வேண்டும்.இக்கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் மங்கையர்க்கரசன், தோட்டக்கலை அலுவலர் தமிழரசி, விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் சம்பத் நாயுடு, சேகர், பழனியப்பன் ஆகியோர் உட்பட 13 துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு துறைகளின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வுகள் காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.

Share this content:

Previous post

மணிக்குறவர் 71-ஆம் ஆண்டு நினைவு விழா சிறப்பாக நடைபெற்றது- பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பு செய்தனர்

Next post

குடியாத்தத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஊட்டச்சத்து திட்டத்தின் இரண்டாம் கட்ட தொடக்க விழா

Post Comment

You May Have Missed