குடியாத்தம் ரோட்டரி மாவட்டம் 3231: தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களுக்கான மார்பக புற்றுநோய் கண்டறியும் மொபைல் மேமோகிராபி பேருந்து பெற ரூ. 8.4 லட்சம் நிதி ஒதுக்கீடு

வேலூர்மாவட்டம் குடியாத்தம் ரோட்டரி மாவட்டம் 3231 சார்பாக பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கண்டறியும் அதிநவீன மொபைல் மேம்போகிரபி பேருந்து வாங்க 2023 இல் விண்ணப்பிக்கப்பட்டது. இந்தப் பேருந்து மூலம் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களுக்கு அவர்கள் பணி புரியும் இடத்திற்ககே சென்று பேருந்துக்கு உள்ளேயே அனைத்து பரிசோதனைகளையும் செய்யக்கூடிய அதிநவீன டிஜிட்டல் மெமோகிராபி கருவி இதில் பொருத்தப்பட்டு இருக்கும். அதில் மார்பக புற்று நோய்க்கான பரிசோதனை செய்தால் ஒரு நிமிடத்தில் அதன் முடிவுகள் வெளிவரக்கூடிய நிலையில் வடிவமைக்கப்படுகிறது. மேலும் கர்ப்பப்பை புற்றுநோய் கண்டறியும் வசதியும் இந்த பேருந்தில் ஏற்படுத்தப்படுகிறது. பெண் மருத்துவர்கள், பெண் செவிலியர்கள், பெண் உதவியாளர்கள், என அனைவரையும் பெண்களைக் கொண்டு பரிசோதிக்கப்படும் திட்டமாகும்.182,542 அமெரிக்க டாலர் மதிப்புள்ள இந்த திட்டத்திற்கு சர்வதேச ரோட்டரியின் ஒப்புதல் சமீபத்தில் வழங்கப்பட்டது. இதற்கு ரோட்டரி மாவட்டத்தின் பங்களிப்பாக சுமார் 53 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் செலுத்த வேண்டிய நிலையில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பொறுப்பாளர்கள் நிதி வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் குடியாத்தத்தை சேர்ந்த ஹபீப் டானிங் உரிமையாளர் ஏ. அத்திகுர் ரஹ்மான் அவர்கள் பத்தாயிரம் அமெரிக்க டாலருக்கான(இந்திய ரூபாய் மதிப்பில் 8 லட்சத்து 40 ஆயிரம்) காசோலையை ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர்கள் கே ஜவரிலால் ஜெயின், ஜே.கே.என்.பழனி ஆகியோரிடம் வழங்கினார். குடியாத்தம் ரோட்டரி சங்க தலைவர் சி.கண்ணன்,முன்னாள் தலைவர்கள் டி‌.என். ராஜேந்திரன்,சி.கே. வெங்கடேசன், வருங்கால தலைவர்கள் கே.சந்திரன், டி.எஸ்.விச்சந்திரன், செயலாளர். பாலமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Share this content:

Post Comment

You May Have Missed