குடியாத்தத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஊட்டச்சத்து திட்டத்தின் இரண்டாம் கட்ட தொடக்க விழா
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் உள்ள எர்த்தாங்கள் ஊராட்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஊட்டச்சத்து திட்டத்தின் இரண்டாம் கட்ட தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வி. அமலு விஜயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஊட்டச்சத்து பெட்டகங்களை பெற்றோர்களுக்கு வழங்கினார். மேலும், நிகழ்வில் பேர்ணாம்பட்டு ஒன்றிய பெருந்தலைவர் சித்ரா ஜனார்த்தனன், மாவட்ட திட்ட அலுவலர் குழந்தை வளர்ச்சி சாந்தி பிரியதர்ஷினி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் உத்தரகுமாரி, வட்டார குழந்தைகள் வளர்ச்சி அலுவலர் சமீம், வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளின் மத்தியில் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
Share this content:
Post Comment