களம்பூர் பேரூராட்சி மன்றத்தில் தமிழக பேரூராட்சிகளின் இயக்குநரை முற்றுகையிட்ட மன்ற உறுப்பினர்கள்.
ஆரணி. ஆக. 23 களம்பூர் பேரூராட்சி அலுவலகத்தில் ஆய்வுக்காக வெள்ளிக்கிழமை வந்திருந்த தமிழக பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண்குரலாவிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி களம்பூர் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் முற்றுகையிட்டனர்ஆரணி அடுத்த களம்பூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு வெள்ளிக்கிழமை வந்திருந்த சென்னையிலிருந்து தமிழக பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண்குரலா வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார். அப்போது களம்பூர் பேரூராட்சி உறுப்பினர்கள் திவ்யபாரதிசீனிவாசன், ராணிசெனட், வெங்கடேசன், திருமணிகண்டன் உள்ளிட்ட உறுப்பினர்கள் பேரூராட்சிகளின் இயக்குநரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது, களம்பூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. அனைத்து பகுதியிலும் குடிநீர் பிரச்சினை, குடிநீர் லீக்கேஜ் பிரச்சினை, குடிநீர் கலங்கிய நிலையில் விநியோகம் செய்யப்படுவது, நெடுஞ்சாலை பணியினால் குழாய் உடைப்பு போன்ற பிரச்சினைகளும், பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும், முறையாக சுத்தம் செய்யாமலும், சில இடங்களில் குடிநீருடன் கழிவு நீரும் கலந்து வருகிறது. இதனை கவனிக்க வேண்டிய பேரூராட்சி பிட்டர் முரளி என்பவர் இப்பிரச்சினைகளை கண்டுகொள்ளாமல் உள்ளார். ஆகையால் அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். மேலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி பேரூராட்சி இயக்குநர் கிரண்குரலாவை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கிரண்குரலா விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதின்பேரில் கலைந்துசென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Share this content:
Post Comment