கடையநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் “மகிழ் முற்றம்” திறந்து வைப்பு
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த “மகிழ் முற்றம்” திட்டத்தின் கீழ், நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சிறப்பாக துவக்க விழா நடைபெற்றது. பள்ளியின் தலைமையாசிரியை பிரேமலதா அவர்களின் முயற்சியால் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த திட்டத்துக்கு, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் திவான் சரிபா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார். பள்ளி மாணவியர்களுக்கான குழு அமைப்பு:பள்ளியில் பயிலும் 2510 மாணவியர்கள், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிற்கும் இரண்டு ஹவுஸ் கேப்டன்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்: – குறிஞ்சி: வெ. ஜோதிகா, சி. சக்திமீனா – முல்லை: இ. தங்கவர்ஷினி, மூ. பிரியதர்ஷினி – மருதம்: மூ. துர்கா தேவி ஸ்ரீ, கு. லீலா தேவி – நெய்தல்: மா. இசச்சியம்மாள், ச. மனீஷா – பாலை: சு. உமா மகேஸ்வரி, மா. ப்ரீத்தி மொத்தம் 260 வகுப்புத் தலைவர்கள் (House Leaders) மற்றும் ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு வழிகாட்டி ஆசிரியர் (House Head Teacher) நியமிக்கப்பட்டனர்: – குறிஞ்சி: தேவி – முல்லை: அருள் கனி – மருதம்: சண்முக சுந்தர பாண்டியன் – நெய்தல்: மகா செல்வி – பாலை: லதா மேரி திட்டத்தின் நோக்கம்: மகிழ் முற்றம் திட்டத்தின் மூலம், மாணவர்களின் தலைமைத் திறனை வளர்ப்பது, நேர்மறை சிந்தனைகளை ஊக்குவிப்பது, ஒழுக்கம், சுத்தம், போட்டியில் பங்கேற்பு மற்றும் நட்புறவை மேம்படுத்துவது என கல்வியாளர்கள் கூறுகின்றனர். பாடம் சார்ந்த மற்றும் இணை செயல்பாடுகள் மூலம் மதிப்பீடு அளிக்கப்பட்டு, அதிக புள்ளிகளைப் பெறும் அணியினருக்கு மாதாந்திரமாக பாராட்டு வழங்கப்படும். இந்நிகழ்ச்சியில், ஹபிபுல்லா என்பவர் தமது சொந்த செலவில் இனிப்புகளை வழங்கி மாணவியர்களின் மகிழ்ச்சிக்கு காரணமானார். கல்வியாளர்களும் பெற்றோர்களும் இந்த திட்டம் மாணவர்களின் ஆளுமைத் திறனை சிறப்பாக மேம்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்தனர்.
Share this content:
Post Comment