கடம்ப வீதி சிறு குறு தொழில் முனைவோர்கள் விழா
கடம்ப வீதி நிறுவனத்தின் ஏற்பாட்டில், மகேஸ்வரி அவர்களின் தலைமையில் மற்றும் சந்திரசேகர் அவர்களின் முன்னிலையில் “சிறு குறு தொழில் முனைவோர்கள் விழா” தற்போது நடைபெறியுள்ளது. விழாவில் தமிழக காவல்துறை உதவி ஆணையர் சண்முகம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கினார். இந்த நிகழ்ச்சியில் இயற்கை உணவுகள், இயற்கை மூலிகை மருந்துகள், வீட்டு தயாரிப்புகள் உள்ளிட்ட பல வகையான சிறு குறு தொழில் முனைவோர்கள் தங்கள் தயாரிப்புகளை வெளியிட்டனர். இந்நிகழ்ச்சியில் குறும்பட இயக்குனர், நடிகர் மற்றும் சமூக சேவகர் சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், வசனகர்த்தா மற்றும் நடிகர் அப்பா பாலாஜி, எழுத்தாளர் விவேக் ராஜ், மேக்கப் ஆர்ட்டிஸ்டும் நடிகையுமான அங்கிதா, குழந்தை நட்சத்திரம் லியானா, ஆர்கேஸ்னர் சித்ரா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசுகள் வழங்கப்பட்டு, நன்றி உணவுகளும் பரிமாறப்பட்டது.
Share this content:
Post Comment