இராமேஸ்வரத்தில் பல்வேறு திட்டங்கள் திறந்து வைப்பு: பொதுமக்கள் பயன்பாட்டிற்கு புதிய கட்டிடங்கள்
இராமேஸ்வரம்: 14 நவம்பர் 2024 அன்று, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சி முத்துராமலிங்கம் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து பல்வேறு புதிய கட்டிடங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. 16வது வார்டில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடையும், 17வது வார்டில் கடற்கரை மாரியம்மன் கோவில் தெருவில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கமும் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு திறந்து விடப்பட்டது. மேலும், வேர்கோட் பகுதியில் தேவர் திருமகன் பெயரில் ஆட்டோ ஓட்டுனர் தொழிலாளிகளுக்காக புதிய கட்டிடம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் இராமேஸ்வரம் நகர கழக செயலாளர் கே.ஈ. நாசர்கான், நகர மன்ற தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு திருப்பணிகளுக்கு ஒத்துழைப்பு அளித்தனர்.
Share this content:
Post Comment