ஆசிரியர் பணி நிறைவு மற்றும் பாராட்டு விழாவின் போது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் பாமணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் ஓய்வு பாராட்டு விழா , விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் கிரிஜா தலைமை வகித்து ஆண்டு அறிக்கை வாசித்தார் ஆசிரியை மீரா வரவேற்றார்.ஆண்டு விழாவில் விளையாட்டு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.இந்த விழாவில் வட்டார கல்வி அலுவலர் அறிவழகன், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் , பணி ஓய்வு ஆசிரியர் அவரது குடும்பத்தினர் மற்றும் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர், உறுப்பினர்கள் பல்வேறு பள்ளி|ஆசிரியர்கள், வட்டார மேற்பார்வையாளர் அனுப்பிரியா, ராய்டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவனத் தலைவர் முனைவர் துரை ராயப்பன், அன்புள்ளங்கள் அறக்கட்டளை ராஜாமணி, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஓய்வு பழனியப்பன் ,ராஜம் பிரிண்டர்ஸ் ரவிக்குமார் ,இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் ரேவதி ,பாலா அபி ஆகியோர் கலந்து கொண்டனர். வட்டார கல்வி அலுவலர் அறிவழகன் வாழ்த்தி பேசும் போது ஆசிரியப் பணியில் 26 ஆண்டு காலம் பணிபுரிந்து ஓய்வு பெறும் ஆசிரியர் பாஸ்கரன் பள்ளியின் வளர்ச்சியில் மிக முக்கிய பங்காற்றியதாக வாழ்த்தி பேசினார். ராய் டிரஸ்ட் நிறுவனர் முனைவர் துரை ராயப்பன் பேசும்பொழுது எளிமையின் உருவமாக திகழ்ந்த ஆசிரியர் பாஸ்கர் மிக மிக எளிமையாகவும், பள்ளியின் வளர்ச்சிக்கு முக்கிய தூணாக விளங்கியதாக பாராட்டி பேசினார்.ஆசிரியர் அவர்களுக்கு குடும்பத்தினர் சார்பாக கணையாழி அணிவிக்கப்பட்டது . ஆசிரியர்கள் நண்பர்கள் மூலம் வாழ்த்து மடலும், வாழ்த்துரையும் வழங்கி சிறப்பிக்கபட்டது.சிறப்பாக நடைபெற்ற இந்த விழாவில் ஆசிரியரை பாராட்டி பலர் வாழ்த்தி பேசினர். நிகழ்வில் பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் என முன்னுாற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பள்ளியின் சார்பாக நினைவு பரிசு ஓய்வு பெற்ற ஆசிரியர் பாஸ்கர் அவர்களுக்கு வழங்கப்பட்டது.ஆசிரியை மலர்விழி நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.
Share this content:
Post Comment