அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மகிழும் வகையில் கோரிக்கைகள் அடுத்தடுத்து நிறைவேற்றப்படும்: தமிழக அரசு அறிக்கை
சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் மகிழும் வகையில் அவர்களது கோரிக்கைகள் அடுத்தடுத்து நிறைவேற்றப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த 2019 ஜனவரி 25-ம் தேதி அப்போதைய முதல்வர் பழனிசாமி, ஒரு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வாங்கும் ஊதியத்தைச் சொல்லி ஆசிரியர்களுக்கு இவ்வளவு சம்பளமா எனக் கூறி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களைக் கேவலப்படுத்தினார். அவருடைய ஆட்சியில் போராடிய அரசு ஊழியர், ஆசிரியர்களைப் பார்த்து, “அதிக சம்பளம் வாங்கும் நீங்கள் போராடலாமா? என்று கேட்டு, ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் கொச்சைப்படுத்தினார். ஆனால், இன்று ஆசிரியர், அரசு ஊழியர்களுக்காக இந்த அரசு எதுவும் செய்யவில்லை எனக் கூறுகிறார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 19 ஆண்டு முதல்வர் பொறுப்பில், 4 முறை ஊதியக் குழுக்களை அமைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்கினார். அதனால், அவர்கள் இந்த அரசுக்கு எப்போதும் ஆதரவாக இருக்கிறார்கள். ஒரே ஒரு கையெழுத்தில் 1.73 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்தனர். அதன்பின், சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் சென்று உத்தரவை டிஸ்மிஸ் செய்ய வைத்த பெருமை திமுகவுக்கு உண்டு. திமுக அரசு வழங்கிய பல சலுகைகளை, அதிமுக அரசு ரத்து செய்தது. அனைத்தையும் 2006-ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது மீ்ணடும் நடைமுறைப்படுத்தினார்.
அரசு ஊழியர் நியமனத் தடைச் சட்டம், “டெஸ்மா” சட்டம் ரத்து செய்யப்பட்டன. 1996-ல், அரசு ஊழியர்கள் முழு ஓய்வூதியம் பெற தகுதியுள்ள பணிக்காலம் 33 ஆண்டுகள் என்பது 30 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. இவ்வாறு பல சலுகைகள் வழங்கப்பட்டது.
Share this content:
Post Comment