அப்போலோ மருத்துவமனை (சென்னை), இந்தியாவின் முதல் ரோபோட்டிக் மற்றும் டெலிசர்ஜரி (தொலைதூர அறுவை சிகிச்சை) திட்டத்தைத் தொடங்கியது!

சென்னை, 16மார்ச்
சென்னை அப்போலோ மருத்துவமனை, ரோபோட்டிக் அறுவை சிகிச்சை, டிஜிட்டல் அறுவை சிகிச்சை மற்றும் தொலைதூர கூட்டு அறுவை சிகிச்சை முறைகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், ‘அப்போலோ இன்ஸ்டிடியூட் ஆஃப் ரோபோட்டிக்ஸ் & டெலிசர்ஜரி’எனும் புதிய சிகிச்சை மையத்தைத் தொடங்கியுள்ளது. 6-வது அப்போலோ சர்வதேச கொலோரெக்டல் சிம்போசியம் நிகழ்வின் போது இந்த முக்கியமான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தத் திட்டம் குறித்து பேசிய கொலோரெக்டல் அறுவை சிகிச்சை நிபுணரும், AICRS 2026-ன் தலைவருமான பேராசிரியர் டாக்டர் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன்இன்றைய மலக்குடல் புற்றுநோய் சிகிச்சைக்கு, ஒரு முழுமையான ஒருங்கிணைந்த பல்துறை அணுகுமுறை தேவைப்படுகிறது. அறுவை சிகிச்சை நிபுணர்கள், புற்றுநோய் நிபுணர்கள் மற்றும் பிற மருத்துவ வல்லுநர்களின் கூட்டு நிபுணத்துவத்தால் நோயாளிகள் தங்களது பிரச்சினைகளுக்கு அவசியமான, தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சையைப் பெறுவதை உறுதி செய்யவே ‘அப்போலோ ரெக்டல் கேன்சர்’ திட்டம் உருவாக்கப்பட்டது. ரோபோட்டிக் அறுவை சிகிச்சை போன்ற தொழில்நுட்பங்களின் ஒருங்கிணைப்பு, குறிப்பாக சிக்கலான இடுப்புப் பகுதி அறுவை சிகிச்சைகளில் துல்லியத்தை அதிகரிப்பதோடு, நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தைப் பாதுகாத்து சிறந்த பலன்களையும் அளிக்கிறது,” என்றார்.



Post Comment