வாக்கு எண்ணிக்கை பாதுகாப்புக்காக ஆந்திராவில் மாவட்டம்தோறும் சிறப்பு போலீஸ் அதிகாரி நியமனம்
விஜயவாடா: ஆந்திராவில் தேர்தலின் போதும், தேர்தலுக்கு பின்னரும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இதனால் ஆந்திராவுக்கு 25 கம்பெனிதுணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வரும் ஜூன் 19-ம் தேதி வரைஅவர்கள் பணியில் அமர்த்தப்பட் டுள்ளனர்.
இந்நிலையில், வரும் ஜூன்4-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும்போது, வன்முறை சம்பவங்கள் ஏதும் நடைபெறாதவாறு, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு துணை எஸ்பி, டிஎஸ்பி போன்ற சிறப்பு போலீஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ஆந்திர மாநில டிஜிபி ஹரீஷ்குமார் குப்தா நேற்று கூறினார்.
வன்முறை சம்பவங்கள் நடந்தால் உடனுக்குடன் தகவல் கொடுப்பதற்கும், இவர்களின் மேற்பார்வையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கும் போலீஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி தெரிவித்துள்ளார்.
Share this content:
Post Comment