மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோரை ‘கட்டுப்படுத்த’ பார்களுக்கு கோவை போலீஸ் புதிய அறிவுரை
கோவை: மது அருந்த சொந்தமாக வாகனம் ஓட்டி வருவோர் திரும்பிச் செல்ல மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என மதுபானக் கூடங்களுக்கு கோவை காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
கோவை மாநகர காவல்துறையினர் இன்று (ஆக.26) வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை 3 இடங்களில் மாநகரில் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில், 126 இருசக்கர வாகன ஓட்டிகள், 52 நான்கு சக்கர வாகன ஓட்டிகள் என மொத்தம் 178 பேர் மீது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.மது அருந்திவிட்டு, வாகனம் ஓட்டுவதை தடுப்பது தொடர்பாக, முன்னரேகோவைமாநகரில் உள்ள அனைத்து வகை மதுபானக்கூட உரிமையாளர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அவர்களது, மதுக்கூடங்களுக்கு சொந்தமாக வாகனம் ஓட்டி வருபவர்கள் திரும்ப செல்லும் பொழுது மது அருந்தியிருந்தால், அவர்கள் வாகனத்தை இயக்காமல் இருக்க தேவையான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Share this content:
Post Comment