தூத்துக்குடி வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கோரம்பள்ளம் வடிநிலக் கோட்டம் மூலம் உப்பாத்து ஓடை தூர்வாரப்பட்டுள்ளதை பார்வையிட்டார்.பின்னர், புதுக்கோட்டை T.D.T.A PSP மேல் நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் சத்துணவின் தரம் மற்றும் சுவை குறித்து ஆய்வு செய்து, அங்கு பயிலும் மாணவியர்களுக்கு வழங்கப்படும் சத்துணவுக்கு தேவையான பொருட்களின் இருப்பு குறித்த பதிவேட்டினை பார்வையிட்டு, மாணவியர்களுகளுடன்; கலந்துறையாடிய பின்னர், அப்பள்ளியில் உள்ள நூலகத்தினை பார்வையிட்டார்.தொடர்ந்து, சிறுப்பாடு கிராமத்தில் வெள்ளத்தால் சேதமடைந்து வீடு தற்போது ஊரக வளர்ச்சித்துறை மூலம் புதிதாக கட்டப்பட்டு வருவதையும், குமாரகிரி ஊராட்சியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் விவசாய நுண்ணீர் பாசனத் திட்டம் 2024-25 கீழ் பயனடைந்த விவசாயி சுந்தரவேல் தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ள சொட்டுநீர் பாசனத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தொடர்ந்து, அரசு தொழிற் பயிற்சி நிலையத்தை பார்வையிட்டு அங்கு பயிலும் மாணவர்களுக்கு எடுக்கப்படும் பாடகங்கள் குறித்து கேட்டறிந்த பின் வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் தங்களது துறைகளின் மூலம் தூத்துக்குடி வட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஐஸ்வர்யா, தூத்துக்குடி வட்டாட்சியர் முரளிதரன், கீழ் தாமிரபரணி வடிநிலக்கோட்டம் செயற்பொறியாளர் வசந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாணிக்கவாசகம், பானு மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Share this content:

Post Comment

You May Have Missed