Loading Now
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்: – திருப்பூர் கலெக்டர் தகவல்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்: – திருப்பூர் கலெக்டர் தகவல்

திருப்பூர், செப். 23
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஊரக பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடை கள் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். எனவே பட்டாசு கடை அமைக்க விரும்புபவர்கள் மனை வரைபடம், கடை அமையவிருக்கும் இடத்தின் வரைபடம் 2 நகல்கள், பட்டா மற்றும் ஆவணங்களை இணைக்க வேண்டும்.
மேலும் தற்காலிக பட்டாசு உரிம கட்டணமாக ரூ.700-ஐ www.karuvoolam.tn.gov.in/challan/echallan என்ற இணையத்தில் செலுத்திய தற்கான அசல் செலுத்துச்சீட்டு பெற்றிருக்க வேண்டும்.
பட்டாசு கடை அமைக்க உரிமம் கோருவது இடத்தின் உரிமையாளர் என்றால் அதற்கான ஆவணங்கள் மற்றும் நடப்பு நிதி ஆண்டின் சொத்துவரி செலுத்திய ரசீது நகல், வாடகை கட்டிடம் என்றால் வரி செலுத்திய ரசீது நகலுடன் இடத்தின் உரிமையாளரிடம் ரூ.200-க்கான முத்திரைதாளில் பெறப்பட்ட அசல் சம்மத கடிதம் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் புகைப்படம், விண்ணப்பதாரரின் முகவரிச்சான்று, தீயணைப்புத்துறை தடையின்மை சான்று ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை வருகிற 18-ந் தேதிக்குள் இ-சேவை மையங்களில் மேற் கண்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். 18-ந் தேதிக்கு பிறகு விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. இந்த தகவலை திருப்பூர் கலெக்டர் மனிஷ் நாரணவரே தெரிவித்துள்ளார்.

Share this content:

You May Have Missed