சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை ரூ26,500 கோடி மதிப்பீட்டில் 8 வழிப்பாதையாக மாற்றம்: திட்ட அறிக்கை தயார்
வழி விரைவுச் சாலை (கிரீன் பீல்டு எக்ஸ்பிரஸ் வே) எனப்படும் 8 வழி அதிவிரைவு சாலையாக மாற்ற, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், ‘‘சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 8 வழிப் பாதையாக மாற்ற முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதேபோல் பாரத்மாலா திட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை வரையில் 8 வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது. இதனுடன், அவசர சேவை நிலையங்கள், ஓய்வு இடங்கள் மற்றும் பிற சாலை சேவைகளும் அங்கு வரப்போகிறது. இந்த திட்டம் நிறைவேறும்போது, தமிழ்நாட்டில் போக்குவரத்து மேம்படும், வணிகமும் மேம்படும். இந்த 8 வழிப்பாதை எங்கு தொடங்குகிறது என்றால், சென்னை அடுத்த சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து தொடங்குகிறது. ரூ26 ஆயிரத்து 500 கோடி மதிப்பில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டு விட்டது. சாலை வளைவுகள், அதிக விபத்து ஏற்படும் பகுதிகள், கூடுதல் மேம்பாலங்கள், சாலைகள் அமைக்க நிலம் எடுப்பு போன்ற விவரங்களை சேகரிக்கப்படுகிறது. விரைவில் திட்ட அறிக்கையை தயாரித்து, அரசின் அனுமதியை பெற்று, பணிகளை தொடங்கப்படும். இந்த விரைவு சாலை சென்னையில் இருந்து திருச்சி வரை பல்வேறு முக்கிய நகரங்களை இணைக்க உள்ளதால் மிகவும் முக்கியமானதாகும். இதன் காரணமாக தொழில் வளர்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில் சென்னை – சேலம் அதிவிரைவு சாலை முதலில் பயன்பாட்டிற்கு வரும் என்றும், அதன்பின்னரே சென்னை- திருச்சி அதிவிரைவு சாலை திட்டம் செயல்பாட்டுக்கு வரும். முன்னதாக சென்னை-பெங்களூரு பசுமை அதிவிரைவு சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அந்த சாலையும் விரைவில் பயன்பாட்டிற்கு வரப்போகிறது,’’ என்றனர்.4 மணி நேரமாக குறையும்இந்த விரைவு சாலையை மாநில வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாலை செயல்பாட்டுக்கு வரும்போது சென்னை – திருச்சி இடையே 310 கிலோ மீட்டர் தூரம், பயண நேரம் 6 மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் சென்னை – சேலம் அதிவிரைவு சாலைக்கு அடுத்ததாக சென்னை – திருச்சி அதிவேக சாலை திட்டம் பயன்பாட்டுக்கு வரும்.இதற்கான பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு தொடங்கப்பட இருக்கிறது.
Share this content:
Post Comment