சீக்கியர்கள் பற்றிய கருத்து: ராகுல் மீது வழக்கு தொடர்வேன் என பாஜக செய்தி தொடர்பாளர் எச்சரிக்கை
புதுடெல்லி: இந்தியாவில் சீக்கியர்களின் நிலைமை குறித்து மீண்டும் கருத்து தெரிவித்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது வழக்கு தொடர்வேன் என்று பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஆர்.பி.சிங் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முக்கியத் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அங்கு வெர்ஜினியாவில் உள்ள இந்தியர்களுடன் உரையாடல் நடத்தினார். அப்போது அவர், இந்தியாவில் தற்போது நடக்கும் சண்டை என்பது, அங்கு சீக்கியர்கள் தலைப்பாகை, கடா அணிய அனுமதிக்கப்படுவார்களா என்பது குறித்ததே என்றார்.அங்கிருந்த ஒருவரின் பெயரினைக் கேட்ட ராகுல் காந்தி, “முதலில் அது எதற்கான போராட்டம் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். அது அரசியலுக்கான போராட்டம் இல்லை. மிகவும் மேலோட்டமானது. சீக்கியரான அவர் இந்தியாவில் தலைப்பாகை அணிய அனுமதிக்கப்படுவாரா? அல்லது சீ்க்கியர்கள் கடா அணிய அனுமதிக்கப்படுவார்களா, அவர்கள் குருத்துவாருக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்களா என்பதற்கான சண்டை அது. இது சீக்கியர்களுக்கான போராட்டம் மட்டும் இல்லை அனைத்து மதத்துக்குமான போராட்டம்” என்று தெரிவித்திருந்தார்.
Share this content:
Post Comment