ஒரே நாளில் 9 லாட்டரி விற்பனையாளர்கள் கைது… அதிரடியாக களமிறங்கிய கலைவாணன் ஐபிஎஸ் : யார் இவர்?

புதுச்சேரி கலைவாணன் புதிய எடுத்த எஸ்எஸ்பி அதிரடி நடவடிக்கையால் ஒரே நாளில் சட்டவிரோத லாட்டரி விற்பனையாளர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.கள்ளச்சாரயம், மது போன்று லாட்டரி சீட்டால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் ஏராளம். லாட்டரி சீட்டை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட போதும் சட்ட விரோதமாக விற்பனையாகிக் கொண்டுதான் இருக்கிறது.இந்தநிலையில் தான் புதுச்சேரியில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) கலைவாணன் பொறுப்பேற்றுள்ள ஐபிஎஸ், விற்பனையாளர்களையும், குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகளையும் கைது செய்ய களத்தில் இறங்கியுள்ளார். கடந்த நவம்பர் 1ஆம் தேதி சட்டம் ஒழுங்கு எஸ்எஸ்பி யாக பொறுப்பேற்ற கலைவாணன், ஏனாம் எஸ்பி, புதுச்சேரி கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய நான்கு எஸ்பி.க்கள், போதைத் தடுப்பு பிரிவு எஸ்பி, எஸ்டிஎஃப் எஸ்பி ஆகியோருடன் ஆலோசனை செய்தார்.அப்போது, “உங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ரவுடிகள் விவரங்கள், சிறையில் இருப்பவர்கள், வெளியில் இருப்பவர்கள், பின்னணியில் இருப்பவர்கள், பொருளாதார உதவிகள் செய்பவர்கள் ஆகியோரின் விவரங்கள் முழுமையாக வேண்டும்” என்று கேட்டுள்ளார்அதுபோன்று, மக்களை அச்சுறுத்தும் வகையில் ரவுடிகள் செயல்கள் உள்ளது. அதை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என்று ஸ்பெஷல் கொடுத்துள்ளார். ஸ்கெட்ச் போட்டுக்“அடுத்ததாக, புதுச்சேரியில் தடைசெய்யப்பட்ட லாட்டரி வியாபாரம் கொடிக்கட்டி பறக்கிறது, அதை முழுமையாக தடுக்க வேண்டும், அதற்கு ஒரே வழி போலீஸார் மாமூல் வாங்குவதை நிறுத்தினாலே லாட்டரி வியாபாரம் மட்டும் அல்ல, தடை செய்யப்பட்ட பொருட்களின் எந்த வியபாரமூம் நடக்காது.லாட்டரி சீட் வியாபாரிகளின் பட்டியல் கொடுத்து உடனடியாக கைது செய்யுங்கள். அமைச்சர் சொன்னார், எம்எல்ஏ சொன்னார், என்று யாரையும் தப்பிக்க விட்டுவிடக்கூடாது” என்று உத்தரவிட்டார். ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் போதைப் பொருட்களை பயன்படுத்திவிட்டு பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். இதை முக்கியமாக கவனிக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.இந்த உத்தரவை தொடர்ந்து போலீசார்தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.இந்நிலையில் நேற்று ஒரே நாளில், லாட்டரிசீட்டுகள் விற்ற வில்லியனுார் வேல்முருகன்,வாணரபேட்டை விஜயன், பிள்ளைத்தோட்டம்பழனிகுமார், சாரம்ஸ்டீபன் ராஜ்,கவுண்டம்பாளையம் குமரன், வேல்ராம்பட்டுகதிர்வேல், முதலியார்பேட்டை குமார்,தயாளன், டோனி, ஆகிய 9 பேரை கைதுசெய்தனர். இன்று(நவம்பர் 7) ஒருவர் எனமொத்தம்இதுவரை 10 கைது செய்யப்பட்டனர்.

Share this content:

Post Comment

You May Have Missed