ஒரு வாரத்தில் திருட்டு வழக்குகளில் 42 பேர் கைது; 34 பவுன் நகைகள் மீட்பு @ சென்னை

சென்னை: பெருநகர் சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 42 குற்றவாளிகளை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து 34 சவரன் நகை, 8 இரு சக்கர வாகங்கள் மற்றும் 2 ஆட்டோக்கள் மீட்க்கப்பட்டுள்ளன.

இது குறித்து சென்னை மாநகர காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ள தகவல்: சென்னை பெருநகரில் செயின் பறிப்பு, வாகனங்கள் திருட்டு, செல்போன் பறிப்பு மற்றும் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய (DACO – Drive Against Crime Offendors) சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவில், தனிப்படை அமைக்கப்பட்டு செயின் பறிப்பு, வாகனங்கள் திருட்டு மற்றும் செல்போன் பறிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 16.05.2024 முதல் 22.05.2024 வரையிலான 7 நாட்களில் செல்போன் பறிப்பு மற்றும் திருட்டு தொடர்பான 26 வழக்குகளில் தொடர்புடைய 3 இளஞ்சிறார்கள் உட்பட 28 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 34 சவரன் தங்க நகைகள், 8 செல்போன்கள், ரூ.1,800 பணம், 1 லேப் டாப் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், கடந்த 7 நாட்களில் மோட்டார் வாகன திருட்டு தொடர்பான 13 வழக்குகளில் தொடர்புடைய 14 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 8 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 2 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், நடப்பாண்டில் 01.01.2024 முதல் 22.05.2024 வரை கடந்த 5 மாதங்களில் திருட்டு, நகைப் பறிப்பு மற்றும் வழிப்பறி வழக்குகளில் கைது செய்யப்பட்ட 103 குற்றவாளிகள் காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.

சென்னையில் காவல் துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, வாகனங்கள் திருட்டு, செல்போன் பறிப்பு, தங்க நகை பறிப்பு மற்றும் திருட்டு குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this content:

Previous post

மீனவர்கள் பிரச்சினையில் நிரந்தரத் தீர்வு: கிழக்கு கடற்படை பிரிவு தளபதியிடம் புதுச்சேரி முதல்வர் வேண்டுகோள்

Next post

காஞ்சிபுரம் | தங்க முலாம் பூசப்பட்ட நகைகளை அடகு வைத்து ரூ.2.53 கோடி மோசடி செய்த வழக்கில் மேலும் 2 பேர் கைது

Post Comment

You May Have Missed