இதுவரை இல்லாத அளவில் பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பார் மோடி: அமெரிக்க நிறுவன சிஇஓ நம்பிக்கை

நியூயார்க்: இந்திய வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவில் பெரும்பான்மை பெற்று பிரதமர் மோடி ஆட்சி அமைப்பார் என்று அமெரிக்காவின் ‘இண்டியா பர்ஸ்ட் க்ரூப்’ நிறுவனத்தின் சிஇஓ ரான் சோமர்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகம் சார்பில் ஏற்பாடுசெய்யப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்ட ரான் சோமர்ஸ் பேசியதாவது: இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. 140 கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட நாட்டின் தேர்தல்நடைமுறை வியப்பைத் தருகிறது. உலகமே இந்தியாவின் தேர்தலை உற்று நோக்குகிறது.

இந்தத் தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி இந்திய வரலாற்றில்இதுவரையில் இல்லாத அளவில்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைப்பார் என்று நம்புகிறேன். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதை இலக்காகக் கொண்டு பிரதமர்மோடி செயல்பட்டு வருகிறார். இதற்காக பல்வேறு சீர்திருத்தங்களை அவர் மேற்கொண்டு வருகிறார்.

இந்தியாவின் அடுத்த 23 ஆண்டு பயணத்தில் அமெரிக்காஉடனான உறவு முக்கியப் பங்கு வகிக்கும். வர்த்தக முதலீடு, பொருளாதார ஒருங்கிணைவு, தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகள்,கல்வி மற்றும் திறன் மேம்பாடு சார்ந்து இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது இந்தியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

Share this content:

Post Comment

You May Have Missed