Loading Now
சத்ரியன் பார்வை மக்கள் சேவை அறக்கட்டளை நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம்,,,

சத்ரியன் பார்வை மக்கள் சேவை அறக்கட்டளை நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம்,,,

திருப்பூர்: சத்ரியன் பார்வை மக்கள் சேவை அறக்கட்டளையின் நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் பெருமாநல்லூர் நியூ இந்தியன் பஞ்சாபி தாபாவில் மதியம் 2 மணியளவில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், 80-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையிலும், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் 15-ஆம் தேதி முப்பெரும் விழாவை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

மேலும், இவ்விழாவில் 80 தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்றும், சமூகப் பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் சமூக ஆர்வலர்களுக்கு விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்துவது என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு அறக்கட்டளையின் நிறுவனர் மருதமுத்து தலைமை தாங்கினார். பொருளாளர் சீனிவாசன், துணைச் செயலாளர் ஹக்கீம், துணைத் தலைவர் சிவன் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

செயலாளர் மணி வரவேற்புரை ஆற்றினார். துணைத் தலைவர் தென்றல் நன்றி கூறினார்.

கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட அமைப்பாளர்கள் ராஜாமணி, சிவகுமார், கார்த்திகேயன், ராஜா, ஜெயசீலன் உள்ளிட்ட அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Share this content:

You May Have Missed