Loading Now
ஆடியோ உரிமையில் சம்பவம்: நம்பர் 1 இடத்தை பெற்ற ஏ.ஆர்.ரகுமான்?

ஆடியோ உரிமையில் சம்பவம்: நம்பர் 1 இடத்தை பெற்ற ஏ.ஆர்.ரகுமான்?

ராமாயணா படத்தின் ஆடியோ உரிமை ரூ.85 கோடிக்கு விற்பனையாகி உள்ளது. இந்த படத்தின் ஆடியோ உரிமை அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதால் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தான் இந்திய அளவில் நம்பர் ஒன் இசையமைப்பாளர் என கூறப்படுகிறது.ராமாயணம் காவியத்தை அடிப்படையாகக் கொண்டு, பிரம்மாண்ட பொருட்செலவில் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படம் இந்திய சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. இந்தப் படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த திரைப்படத்தின் முதல் பாகம் 2026 தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.ஏ.ஆர். ரகுமான் – ஹான்ஸ் ஜிம்மர் கூட்டணிஇந்தப் படத்திற்கு இந்தியாவின் ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மற்றும் உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான படத்தின் கிளிம்ப்ஸ் மற்றும் டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.“ராமாயணா” டிரெய்லர்‘ராமாயணா’ திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. பிரமாண்ட விஷுவல் எபெக்ட்ஸ், வலுவான பின்னணி இசை, கதாபாத்திரங்களின் தோற்றம் மற்றும் காட்சியமைப்புகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. குறிப்பாக படத்தின் இசை பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.இந்த நிலையில், ராமாயணா படத்தின் ஆடியோ உரிமை ரூ.85 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து உருவான ‘ஜவான்’ படத்தின் ஆடியோ உரிமை ரூ.30 கோடிக்கு விற்கப்பட்டது தான் அதிகமாக இருந்த நிலையில் அதனை இப்படம் முறியடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.சினிமா வியாபாரத்தை பொருத்தவரை எந்த இசையமைப்பாளர் இசையமைத்துள்ள படத்தின் ஆடியோ உரிமை அதிக விலைக்கு விற்கப்படுகிறதோ அவர்தான் நம்பர் 1 இசையமைப்பாளர் என்று கருதப்படுவார். அந்த வகையில் ‘ராமாயணா’ படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தான் இந்திய அளவில் நம்பர் ஒன் இசையமைப்பாளர் என கூறப்படுகிறது.

Share this content:

You May Have Missed