×

Highlight

கள்ளக்குறிச்சி பெண் கலெக்டருக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பியதாக சர்ச்சை! – த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் திட்டவட்ட மறுப்பு

கள்ளக்குறிச்சி கலெக்டர் விவகாரம்

சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களுக்கு அரசியல் சதி எனக் குற்றச்சாட்டு – தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியினர் மீது புகார்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் கலெக்டர் பத்மஜாவுக்கு ஆபாசமான குறுந்தகவல்கள் அனுப்பியதாகத் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ள எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத் திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

கள்ளக்குறிச்சி தொகுதி தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் (36), மாவட்ட கலெக்டர் பத்மஜாவுக்கு சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு வாட்ஸ்அப் வாயிலாக மதுபோதையில் ஆபாசமான கருத்துகள் அடங்கிய குறுந்தகவல்களை அனுப்பியதாகக் கூறப்படும் தகவல்கள் தற்போது வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட கலெக்டர் கட்சியின் மூத்த அமைச்சர் ஒருவரிடம் புகார் தெரிவித்ததாகவும், அதன் தொடர்ச்சியாக எம்.எல்.ஏ.வை நேரில் அழைத்து வருத்தம் தெரிவிக்கச் செய்து சமரசம் ஏற்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து, அரசு நிகழ்ச்சிகளில் கலெக்டரும், எம்.எல்.ஏ.வும் ஒன்றாகப் பங்கேற்பதைத் தவிர்த்து வந்ததாகவும், கலெக்டருக்குத் தனிப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சியினர் சிலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

குற்றச்சாட்டுகளை மறுத்த எம்.எல்.ஏ.

இந்நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளித்துள்ள எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ், கலெக்டருக்கு எந்தவிதமான தவறான நோக்கத்திலும் குறுந்தகவல் அனுப்பவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தின் உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரியிடம் இதுபோன்ற தவறான அணுகுமுறையில் எவ்வாறு நடந்துகொள்ள முடியும் என்றும், கலெக்டரின் வீட்டுக்குச் சென்று பிரச்சினை செய்ததாகக் கூறப்படும் தகவலிலும் உண்மையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்றும், இந்தத் தகவல்களுக்குப் பின்னால் தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப அணியினர் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

புதிய பேருந்து நிலைய விவகாரத்தால் அரசியல் மோதலா?

மேலும், கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த எ.வ. வேலு மற்றும் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் கள்ளக்குறிச்சியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் புதிய பேருந்து நிலையத்தைக் கொண்டு வந்ததாக அருள் விக்னேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.

புதிய பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள நிலங்கள் மற்றும் மனைகள் தொடர்பாக முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். புதிய பேருந்து நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் தான் தீவிரமாக ஈடுபட்டு வருவதால், அரசியல் காழ்ப்ப

Share this content:

Previous post

நூலகங்களுக்கு இதுவரை ஒரு புத்தகம் கூட வாங்கவில்லை! – அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி விளக்கம்

Next post

நுங்கம்பாக்கத்தில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீச்சு: கார், 4 இருசக்கர வாகனங்கள் சேதம் – 5 பேர் கைது!

Post Comment

You May Have Missed