Loading Now

மகரம், கும்பம், மீனம்: வார பலன்கள் @ செப்.10 – 16

பலன்கள்: இந்த வாரம் மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். கேதுவின் சஞ்சாரம் மனதில் தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்யும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நட்பாக இருந்தவர்கள் பிரிந்து செல்லலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.

குடும்பத்தில் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசுவது நன்மை தரும். பிள்ளைகளுக்காக சில பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் வழக்கம்போல் நடக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.

பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கலைத்துறையினருக்கு புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. அரசியல்துறையினருக்கு பல தடைகளை தாண்டி செயல்பட வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். மனதில் இருந்த கவலை நீங்கும்.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் அடுத்தவர்களை அனுசரித்து போய் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத செலவு ஏற்படும். சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். பணவரவு இருக்கும். அடுத்தவர் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். பெரியோர் உதவி கிடைக்கும். காரிய தடைகள் வரலாம். வழக்குகளில் சாதகமான போக்கை தரும். நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.

திருவோணம்: இந்த வாரம் தொழில் வியாபாரம் தொடர்பாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அவ்வப்போது வாக்கு வாதங்கள் உண்டாகலாம்.

அவிட்டம் 1, 2 பாதங்கள்: இந்த வாரம் கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது மனதுக்கு திருப்தியை தரும். உறவினர்களுடன் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். மற்றவர்கள் பிரச்சனை தீர பாடுபடுவீர்கள். காரிய தடை, தாமதம் ஏற்படலாம்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வியாழக்கிழமை அன்று வெற்றிலை மாலை போட்டு வணங்க எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். மனதில் தைரியம் கூடும்.

பலன்கள்: இந்த வாரம் எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். வாக்குவாதங்களை அகலும். நண்பர்கள், உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் என அனைவரும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் சில்லறை சண்டைகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களில் வரும் வருமானம் கூடும். குடும்பத்தில் இருந்த இறுக்கமான நிலை மாறும்.

கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை நீங்கும். தொழில் வியாபாரம் மந்தமாக இருந்தாலும் பணவரத்து திருப்தி தரும். கடன்களை அடைப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையை கண்டு மேல் அதிகாரிகள் திருப்தியடைவார்கள். பெண்களுக்கு எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

கலைத்துறையினருக்கு இருந்த பிரச்சனை குறையும். அரசியல்வாதிகள் வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொருள் வரத்து கூடும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது நடவடிக்கைகள் பெற்றோருக்கு திருப்தியை தரும்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். உயர்கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும். பணவரத்தில் இருந்த தடை நீங்கும். காரிய வெற்றி உண்டாகும். உங்களை விட உங்களை சுற்றி இருக்கும் மற்றவர்கள் பயன்படும் விதமாக திறமையை பயன்படுத்துவீர்கள். காரியங்கள் சாதகமாக நடந்து முடியும்.

சதயம்: இந்த வாரம் விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. திடீர் மன தடுமாற்றம் உண்டாகலாம். பணவரத்து திருப்தி தரும். சின்ன சின்ன பிரச்சனைகள் தீரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேற்கொள்ளும் கடுமையான பணிகள் கூட எளிமையாக நடந்து முடியும். குடும்பத்தில் இருப்பவர்களின் நடவடிக்கை டென்ஷனை ஏற்படுத்தலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.

பரிகாரம்: சனிக்கிழமையில் சனி பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வணங்க உடல் ஆரோக்கியம் பெறும். கடன் பிரச்சனை தீரும்.

பலன்கள்: இந்த வாரம் வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்க பெறுவீர்கள். சூரியன் சஞ்சாரம் அனுகூலமான பலன்களை தரும். பணவரவு மனதிருப்தியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.

நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். தொழில் வியாபாரததில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப் பளு குறைந்து காணப்படுவார்கள். பெண்களுக்கு எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். கலைத்துறையினருக்கு உணர்ச்சிகரமாக பேசி மற்றவர்களை கவருவீர்கள்.

எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை தீரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

பூரட்டாதி 4ம் பாதம்: இந்த வாரம் எடுத்த காரியத்தை சாதகமாக செய்து முடிப்பீர்கள். திடீர் மன தடுமாற்றம் உண்டாகலாம். பெரியோர் ஆலோசனை கை கொடுக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். கவனமாக பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். காரிய அனுகூலம் உண்டாகும். மனகுழப்பம் நீங்கி தெளிவு ஏற்படும்.

உத்திரட்டாதி: இந்த வாரம் எதையும் ஆராய்ந்து அதன் பிறகே அதில் ஈடுபடும் மனநிலை உண்டாகும். ஆன்மிக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். காரிய அனுகூலங்களும் உண்டாகும். மனோதைரியம் அதிகரிக்கும். வீடு, வாகனங்கள் தொடர்பான செலவு ஏற்படும்.

ரேவதி: இந்த வாரம் தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். லாபம் கூடும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளால் டென்ஷன் அடைவார்கள். எதிர்பார்த்தபடி சக ஊழியர்களால் உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: சித்தர்களை வணங்கி வர எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும்.

Hindu-Tamil-Thisai-Weekly-Predicton-Sep-10-Sep-16-Image மகரம், கும்பம், மீனம்: வார பலன்கள் @ செப்.10 - 16

இந்த வார கிரகங்களின் நிலை

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

Share this content:

You May Have Missed