Loading Now

‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்துக்காக ஜாய் ஆலுக்காஸுக்கு டெண்டர் வழங்கியதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

சென்னை: ​தாய்​மாமன் தங்க மோதிரம் திட்​டத்​துக்​கான டெண்​டரை ஜாய் ஆலுக்​காஸ் நிறு​வனத்​துக்கு வழங்​கியதை எதிர்த்து தொடரப்​பட்ட வழக்கை தள்​ளு​படி செய்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

அரசு மருத்​து​வ​மனை​களில் கடந்த ஜூன் 22 முதல் பிறக்​கும் குழந்​தைகளுக்கு ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்​டத்​தின்​கீழ் 22 காரட் தரத்​தில் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்​கப்​படும் என்று தமிழக அரசு அறி​வித்​துள்​ளது.

4.42 லட்சம் மோதிரங்கள்

இத்​திட்​டத்​துக்​காக 4.42 லட்​சம் தங்க மோதிரங்​களைக் கொள்​முதல் செய்ய தமிழ்​நாடு மருத்​துவ சேவை​கள் கழகம் டெண்​டர் கோரியது. அதில், ஒரு கிராம் தங்​கத்​துக்​கான மார்க்​கெட் விலை​யோடு, செய்​கூலி, சேதா​ரம் உள்​ளிட்ட இதர கட்​ட​ண​மாக தங்​கள் நிறு​வனத்​துக்கு ரூ.1 பைசா மட்​டும் கூடு​தலாக வழங்​கி​னால் போதும் என்று கோரிய கேரளாவைச் சேர்ந்த பிரபல​மான ஜாய் ஆலுக்​காஸ் நிறு​வனத்​துக்கு டெண்​டர் வழங்​கப்​பட்​டுள்​ளது.

இந்த டெண்​டரை ரத்து செய்​யக் கோரி சென்​னையைச் சேர்ந்த ராஜ் என்​பவர் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார். தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி, நீதிபதி ஜி.அருள்​முரு​கன் அமர்​வில் இந்த வழக்கு விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது மனு​தா​ரர் தரப்​பில் கூறியதாவது: மாநிலம் முழு​வதும் உள்ள 107 மையங்​களுக்கு ஹால்​மார்க் முத்​திரை​யுடன் தங்க மோதிரத்தை அனுப்ப வேண்​டும் என டெண்​டர் விதி​களில் கூறப்​பட்​டுள்​ளது.

ஹால்​மார்க் முத்​திரை பெறவே ஒரு மோதிரத்​துக்கு ரூ. 45 கட்​ட​ணம் செலுத்த வேண்​டிய சூழலில், வெறும் ரூ.4,417-க்கு 4.42 லட்​சம் மோதிரங்​களை சப்ளை செய்​வ​தாக ஜாய் ஆலுக்​காஸ் நிறு​வனம் ஒப்​புக்​கொண்​டது வணிக ரீதி​யில் சாத்​தி​யமற்​றது.

இதை அனு​ம​தித்​தால், நகை தரமற்​ற​தாக இருக்க வாய்ப்பு உள்​ளது. தவிர, மோதிரம் டெண்​டரை மருத்​துவ சேவைக் கழகம் இறுதி செய்​வது பொருத்​தமற்​றது. இவ்வாறு மனுதாரர் தரப்பில் வாதிடப்​பட்​டது.

அப்​போது குறுக்​கிட்ட நீதிப​தி​கள் கூறிய​தாவது: தங்க மோதிரம் திட்​டம் தவறு என்​றோ, டெண்​டர் விதி​மீறல் நடந்​த​தாகவோ மனு​தா​ரர் வழக்கு தொடர​வில்​லை. சம்​பந்​தப்​பட்ட நிறு​வனத்​துக்கு டெண்​டர் வழங்​கியதை எதிர்த்து மட்​டுமே வழக்கு தொடர்ந்​துள்​ளார்.

இது​போல டெண்​டரை ஒரு நிறு​வனத்​துக்கு வழங்​கியதை எதிர்த்து வழக்கு தொடர முடி​யாது. மேலும் அந்த நிறு​வனம் மோதிரத்தை ஒரு பைசாவுக்கு சப்ளை செய்​தால் அதன்​மூலம் அரசுக்​குத்​தான் லாபம் கிடைக்​கும். நிறு​வனத்​தின் வரவு – செலவு விவ​காரத்​தில் நீதி​மன்​றம் தலை​யிட முடி​யாது.

ஏற்​கெனவே தங்க நகை வியா​பாரத்​தில் உள்​ள​தால் ரூ.1 பைசாவுக்கு சப்ளை செய்ய நிறு​வனம் முன்​வந்து இருக்​கலாம். ஒரு​வேளை மோதிரம் தரமின்றி இருந்​தால் டெண்​டரை அதி​காரி​கள் ரத்து செய்​வார்​கள்.

எனவே, இந்த வழக்கு விசா​ரணைக்கு உகந்​தது அல்ல. இருப்​பினும் இந்த வழக்​கில் விரி​வான உத்​தரவு பின்​னர் பிறப்​பிக்​கப்​படும். இவ்​வாறு கூறிய நீதிப​தி​கள், வழக்கை தள்​ளு​படி செய்து உத்​தரவிட்​டனர்.

Share this content:

You May Have Missed