Loading Now
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் புறா எச்சத்தால் குடிநீர் அசுத்தம் – தண்ணீர் குடிக்க முகம் சுளிக்கும் மக்கள்

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் புறா எச்சத்தால் குடிநீர் அசுத்தம் – தண்ணீர் குடிக்க முகம் சுளிக்கும் மக்கள்

தமிழ்நாடு தலைநகர் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பயன்படுத்தும் குடிநீர் வசதிகள் போதிய பராமரிப்பின்றி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குடிநீர் தொட்டிகள் மற்றும் குழாய்களின் மேற்பகுதியில் புறாக்கள் அதிகளவில் அமருவதால், அவற்றின் எச்சங்கள் குடிநீர் வசதிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் விழுந்து அசுத்தமான சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது. இதனால் தண்ணீர் குடிக்க வரும் பொதுமக்கள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் முகம் சுளிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

புறா எச்சங்கள் மூலம் சுகாதார பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குடிநீர் வசதிகளை சுத்தம் செய்து, புறாக்கள் அமராத வகையில் பாதுகாப்பு வலைகள் மற்றும் தேவையான தடுப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீதிமன்றம் போன்ற முக்கிய பொது இடங்களில் சுகாதாரமான குடிநீர் வசதி உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Share this content:

Previous post

நீலமங்கலம் அருகே ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல் – இருவர் கைது.

Next post

பிரவாஸ் 5.0-இல் அடுத்த தலைமுறைக்கான பயணிகள் போக்குவரத்து தீர்வுகளை காட்சிப்படுத்தும் Tata Motors, புதிய Ultra Prime மற்றும் Starbus Prime ரகங்களையும் அறிமுகப்படுத்துகிறது

You May Have Missed