Loading Now
சச்சின் டெண்டுல்கர் பங்கேற்ற புதிய பிரச்சாரம் அறிமுகம்

சச்சின் டெண்டுல்கர் பங்கேற்ற புதிய பிரச்சாரம் அறிமுகம்

சென்னை, ஜுன்.05
சென்னை பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குவதற்கும் விற்பதற்கும் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் ஸ்பின்னி, தனது பிரபலமான ‘காட் பிராமிஸ்’ (God Promise) விளம்பர பரப்புரை திட்டத்தை தமிழ்நாட்டிலும் அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த விளம்பரப் பிரச்சாரத்தின் மூலம், பயன்படுத்தப்பட்ட கார்கள் வாங்குதல் மற்றும் விற்பனை தொடர்பான நம்பகத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் தரமான சேவையை மக்களிடம் கொண்டு செல்ல நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.இந்த விளம்பரப் பரப்புரையின் செய்திகள் தொலைக்காட்சி, பொதுப் போக்குவரத்து வாகனங்கள் மற்றும் வெளிப்புற விளம்பர பலகைகள் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்கள் மூலம் பொதுமக்களிடம் கொண்டு செல்லப்படுகின்றன.மேலும், பாடகரும் இசையமைப்பாளருமான அம்ரித் ராம்நாத் இசையமைப்பில், தமிழ்நாட்டு நுகர்வோரின் கலாச்சார உணர்வுகளுக்கு ஏற்ப பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட தமிழ் பாடலுடன் இந்த விளம்பரம் வெளியிடப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சமாகும்.கார் விற்பனையாளர்களுக்கு மட்டுமின்றி, கார் வாங்குபவர்களுக்கும் தரமான மற்றும் நம்பகமான சேவையை வழங்குவதை ஸ்பின்னி உறுதி செய்து வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து ஸ்பின்னி நிறுவனத்தின் விளம்பர தூதரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கர் கூறுகையில், “காட் பிராமிஸ் என்பது நேர்மை மற்றும் நம்பிக்கை போன்ற மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டது. நான் எப்போதும் நம்பிக்கை வைத்திருக்கும் இந்த மதிப்புகள் மக்களுடன் இயல்பாக இணைகின்றன. கார்கள் என்பது வெறும் போக்குவரத்து சாதனங்கள் மட்டுமல்ல; அவை மக்களின் நினைவுகள் மற்றும் வாழ்க்கையின் முக்கிய தருணங்களுடன் பின்னிப்பிணைந்தவை. மக்கள் எதிர்பார்க்கும் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையை இந்த விளம்பரப் பிரச்சாரம் பிரதிபலிக்கிறது” என்றார்.தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட்ட கார் சந்தையில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த புதிய விளம்பர பரப்புரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share this content:

You May Have Missed