மழையால் வாய்க்காலில் ஓடும் தண்ணீரின் அளவை விட நடவு செய்யப்பட்ட வயல்களின் தண்ணீர் அளவு அதிகரித்துள்ளது: விவசாயிகள் கவலை
மயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்று நாள் பெய்த மழையால் வாய்க்காலில் ஓடும் தண்ணீரின் அளவை விட நடவு செய்யப்பட்ட வயல்களின் தண்ணீர் அளவு அதிகரித்துள்ளது வயல்வெளிகளில் உள்ள தண்ணீர் வெளியேறுவதற்கு அமைக்கப்பட்டுள்ள வடிகால் தனிநபரால் வடியவிடாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர் நடவு செய்யப்பட்ட விவசாய நிலங்களில் பாசி – பூஞ்சை – ஆகாயத்தாமரை தண்ணீர் மூலம் நிரம்பியதால் விவசாயிகள் பாதிப்புமயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்று தினங்களாக பெய்த மழையின் காரணமாக செம்பனார்கோயில், குத்தாலம், மணல்மேடு, சீர்காழி, கொள்ளிடம் போன்ற பகுதிகளில் உள்ள கிராம பகுதியில் உள்ள விளை நிலங்களில் வாய்க்கால் தண்ணீர் மட்டம் அதிகரித்துள்ளது.விவசாய நிலங்களுக்கு வடிகால் பகுதியாக நிலவும் வாய்க்கால்கள் அளவுக்கு தண்ணீர் வயில்களில் தேங்கியதாகவும், நடப்பட்ட வயல்களில் சேதம் ஏற்பட்டுள்ளது, கடந்த மூன்று தினங்களில் பெய்த மழையின் காரணமாக சம்பா சாகுபடியில் நடப்பட்டிருக்கும் விவசாய நிலங்கள் 60,000 ஏக்கர் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நிலங்களில் நீர் பரப்பு அதிகரித்துள்ளது.வாய்க்கால் மற்றும் குளங்களில் இருக்கும் பாசி மற்றும் சிறுவகை ஆகாய தாமரை போன்றவைகள் மழை நீரினால் நடப்பட்ட வயில்களில் நிரம்பி உள்ளதால் விவசாய நிலங்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது, பாசி பூஞ்சைகள் நடப்பட்ட வயலில் தேங்கியதால் நாற்று பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழுகி உள்ளது. வடிகால் வழியாக வடியவேண்டிய தண்ணீர் மழை விட்டும் இன்று படியாததால் விவசாயிகள் பெரும் அவதிப்படுகின்றனர், மழையால் தேங்கியுள்ள தண்ணீர் வாய்க்காலில் அளவை விட வயல்களில் அதிகரித்து காணப்படுவதால் நடப்பட்ட விவசாய நிலங்கள் பெரிதும் அழுகி பாதிக்கப்பட்டுள்ளது இதனால் வடிகால் வழியாக தண்ணீர் வடிய வேண்டும் என விவசாயிகள் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டபோது தனி நபர் ஒருவர் தண்ணீர் வடிகால் தன் பகுதியில் இருப்பதாக கூறி வடிய வேண்டிய பகுதியில் கடைமடை அடைத்து வடிய விடாமல் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறார் அவர் மீது அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேகர்,விவசாயி மற்றும் சிவகுமார் விவசாயிகள் கூறியுள்ளானர்.

Post Comment