Loading Now

பழைய ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

பொதுமக்களிடம் உள்ள பழைய ரூ.2,000 நோட்டுகளை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பித்து மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளில், கடந்த ஏப்ரல் 30-ந்தேதி நிலவரப்படி 98.47 சதவீத நோட்டுகள் திரும்பப் பெற ப்பட்டுள்ளன. இருப்பினும், ரூ.5,451 கோடி மதிப்பி லான நோட்டுகள் இன்னும் திரும்பப் பெறப்படாமல் உள் ளன. பழைய ரூ.2,000 நோட்டுகளை வைத்தி ருப்பவர்கள், ரிசர்வ் வங்கியின் 19 வெளியீட்டு அலுவலக ங்களில் நேரில் சென்று மாற்றிக்கொ ள்ளலாம். நேரில் செல்ல முடியாதவர்கள், தபால் மூலமாகவும் நோட்டுகளை அனு ப்பி வைக்கலாம். உரிய நடைமுறைகளைப் பின்பற்றிய பிறகு, அதற்கான தொகை சம்பந்த ப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். தமிழ கத்தில் பழைய ரூ.2,000 நோட்டுகளை மாற்ற விரும்பு வோர், சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலகத்தை நேரில் அணுகலாம் அல்லது தபால் மூலமாக நோட்டுகளை அனுப்பலாம் என்று ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share this content:

Post Comment

You May Have Missed