சுண்டக்கம்பாளையம் அரசுப் பள்ளியில் சுதந்திர தின விழா
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சுண்டக்காம்பாளையம் பள்ளியில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது சுண்டக்காம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் லோகநாதன் தலைமை ஏற்றார். துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி எஸ் எம் சி தலைவர் சித்ரா பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பழனிச்சாமி முன்னிலை வைத்தனர். பள்ளி தலைமையாசிரியர் சு.காளியப்பன் அனைவரையும் வரவேற்று தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திரம் கிடைத்த வரலாற்றை எடுத்துக் கூறினார் ஊராட்சி மன்ற தலைவர் சிறப்புரை ஆற்ற, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆசிரியர் பயிற்றுனர் திரு அருண்குமார் அவர்கள் அரசின் நலத்திட்டங்கள் பற்றியும் பாராட்டி பேசினார்.ஊர் கொத்துக்காரர் செல்வராஜ் ராமசாமி மற்றும் முன்னாள் மாணவர்கள் பெற்றோர்கள் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் மாணவ மாணவியருக்கு பேச்சு கட்டுரை ஓவியம் போட்டிகள் நடைபெற்றது மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் பாராட்டுகள் வழங்கப்பட்டது விழா முடிவில் அனைவருக்கும் லட்டு வழங்கப்பட்டது ஆசிரியர் ரங்கநாதன் நன்றி கூற நாட்டுப் பன்னுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.
Share this content:
Post Comment