Loading Now

ஆஸ்திரேலியா-ஏ அணி உடனான கிரிக்கெட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு

புதுச்சேரி: ஆஸ்திரேலியா-ஏ கிரிக்கெட் அணி உடனான கிரிக்கெட் தொடருக்கான இந்தியா-ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு நான்கு நாட்கள் போட்டி மற்றும் மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் விளையாடப்பட உள்ளது.

ஆஸ்திரேலியா ‘ஏ‘ கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது. இதில் நான்கு நாட்கள் கொண்ட முதல் போட்டி செப்டம்பர் 22 முதல் 25-ம் தேதி வரையும், 2-வது போட்டி 29 முதல் அக்.02-ம் தேதி வரையும் புதுச்சேரியில் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரிலும் மோதுகின்றன. ஒருநாள் போட்டி அக்டோபர் 6, 9 மற்றும் 11-ம் தேதிகளில் நடைபெறுகிறது.

இந்த தொடருக்கான ஆஸ்திரேலியா-ஏ அணி அறிவிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில், இந்தியா-ஏ அணி இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு நாட்கள் போட்டி கொண்ட தொடருக்கான இந்தியா-ஏ அணி

அமன், ஆயுஷ் பாண்டே, தேவ்தத் படிக்கல் (கேப்டன்), சாய் சுதர்ஷன் (துணை கேப்டன்), யாஷ் ரத்தோட், ஷேக் ரஷீத், குமார் குஷக்ரா (விக்கெட் கீப்பர்), ஷம்ஸ் முலானி, தனுஷ் கோட்டியான், துஷார் தேஷ்பாண்டே, அன்ஷுல் காம்போஜ், பிரஃபுல், நாராயண் ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), நாச்சிகேத் பூதே, விஜய்குமார் வைஷாக்.

ஒருநாள் தொடருக்கான இந்திய அணி

பிரியான்ஷ் ஆர்யா, சாய் சுதர்ஷன், தேவ்தத் படிக்கல் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரஜத் பட்டிதார், குமார் குஷக்ரா (விக்கெட் கீப்பர்), நிஷாந்த் சிந்து, விப்ராஜ் நிகம், அர்ஷின் குல்கர்னி, அர்ஷத் கான், நமன் திர், ஹர்திக் பாண்டியா, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), குர்ஜப்னித் சிங், யாஷ் தாக்குர்.

Share this content:

You May Have Missed