தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் தேக்கம்! எம்பி இடம் மனு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில்,கோவை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை, உடுமலை பழனி மெயின் ரோட்டில் சஷ்டி பேக்கரி எதிரில் மழை காலத்தில் தண்ணீர் தேங்கி பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் பெரும் இடையூறாக இருந்து வருகிறது. இது குறித்து மடத்துக்குளம் வியாபாரிகள் சங்கம் சார்பில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் கே ஈஸ்வர சாமி அவர்களை நேரில் மழைநீர் தேங்காதவாறு நிரந்தர தீர்வு வேண்டி மனு கொடுக்கப்பட்டது. அதைப் பெற்றுக் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுத்து தார் சாலையை சரி செய்து கொடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் உறுதி கொடுத்தார். இதில் மடத்துக்குளம் வியாபாரி சங்கத் தலைவர் கே பி எம் சேட், திருப்பூர் மாவட்ட துணைத் தலைவர் கே சக்தி, மடத்துக்குளம் வட்டார வியாபாரி சங்க செயலாளர் கருப்புசாமி, பொருளாளர் எம் தியாகராஜன் மற்றும் வியாபார நண்பர்களும் கலந்துகொண்டனர்.
Share this content:
Post Comment