காஞ்சிபுரம் | தங்க முலாம் பூசப்பட்ட நகைகளை அடகு வைத்து ரூ.2.53 கோடி மோசடி செய்த வழக்கில் மேலும் 2 பேர் கைது

காஞ்சிபுரம்: ராணிப்பேட்டை மாவட்டம், உளியநல்லூர், கிராமத்தைச் சேர்ந்த பாபு மகன் மேகநாதன்(35), நெமிலிவட்டம், நெடும்புள்ளி கிராமத்தைச் சேர்ந்த மனோகர் மகன் பிரகாஷ்(38), காஞ்சிபுரம், வெள்ளைகேட் பகுதியைச் சேர்ந்த எட்டியப்பன் மகன் சுரேந்தர்குமார்(38), பள்ளூரைச் சேர்ந்த ராஜேஷ், சென்னையைச் சேர்ந்த ஜி.சரவணன் உள்ளிட்டோர் ஒன்று சேர்ந்து தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை அடகு வைத்துள்ளனர்.

காஞ்சிபுரம் இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் ஏ.ராஜாராமன் தனது அதிகாரத்துக்கு உட்பட்ட வங்கிகளை ஆய்வு செய்தபோது ஏனாத்தூர் மீனாட்சி மருத்துவக் கல்லூரி இந்தியன் வங்கியில் ரூ.1 கோடியே 51 லட்சத்து 71 ஆயிரம், சங்கர மடம் இந்தியன் வங்கியில் ரூ.66,80,000, கம்மவார்பாளையம் இந்தியன் வங்கியில் ரூ.35,21,000 மதிப்பிலான நகைகளை அடகு வைத்து கடனாக பெற்றதும், அந்த நகைகள் போலி என்பதும் தெரிய வந்தது.

இது தொடர்பாக மண்டல மேலாளர் ராஜாராமன் காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக 3 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது. அரக்கோணம் ராஜேஷ்(38), திம்மசமுத்திரம் ரவிச்சந்திரன்(35) இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share this content:

Post Comment

You May Have Missed