திருமலையில் தரிசனத்துக்கு 20 மணி நேரம் காத்திருப்பு

திருமலை: திருமலையில் பக்தர்களின் கூட்டம்அதிகரித்ததால், திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசம், மாதவம்உள்ளிட்ட தேவஸ்தான விடுதிகளில் தங்கும் அறை கிடைக்காமல் பக்தர்கள் அவதிக்குள்ளாயினர். திருப்பதியில் பஸ் நிலையம், ரயில் நிலையத்திலும் கூட்டம் அதிகமாக உள்ளது.

பக்தர்கள் கூட்டம் அதிகரிப் பால், திருப்பதி தேவஸ்தானம் திருமலையில் சிலா தோரணம் வரை இலவச பஸ்களை ஏற்பாடுசெய்துள்ளது. கோடை விடுமுறை,வார இறுதி நாட்கள் என்பதால் திருப்பதி, திருமலையில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் சுமார் 20 மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது.

பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் இடங்களில் 27 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையங்களையும், அன்னபிரசாத விநியோகத்தையும் தேவஸ்தானம் ஏற்பாடுசெய்துள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் 2.60 லட்சம் பக்தர்கள் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு மார்க்கமாக திருமலைக்கு நடந்து சென்றுள்ளனர். நேற்று சனிக்கிழமை மட்டும் மாலை 5 மணி நிலவரப்படி 46,486 பக்தர்கள் சுவாமியை தரிசித்துள்ளனர்.

Share this content:

Previous post

உயர் நீதிமன்ற நீதிபதி பெயரில் வாட்ஸ்-அப் மூலம் நீதிபதியிடம் ரூ.50,000 மோசடி: மும்பை போலீஸார் விசாரணை

Next post

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Post Comment

You May Have Missed