பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய அலுவலக திறப்பு விழா உற்சாகமாக நடைபெற்றது
திருப்பூர்: பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய அலுவலகம் திறப்பு விழா மற்றும் கொடி ஏற்று திருவிழா திருப்பூர் வடக்கு மாவட்டத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், திருப்பூர் வடக்கு மாவட்ட தொகுதி செயலாளர் கவின் ஜிம்.V.ஜெயமுருகன், மாநில செயற்குழு உறுப்பினர் மு.ஜெய்சங்கர், மாவட்ட தொகுதி தலைவர் R.பொன்னுச்சாமி, முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் K.M.மாது ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
அலுவலக திறப்பின் போது, ஜிம் நண்பர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் 500 பேருக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தனர். புதிய அலுவலகம், பாட்டாளி மக்கள் கட்சியின் இயக்கத்தை வலுப்படுத்தும் முக்கிய மையமாக செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
Share this content:
Post Comment