கடலூர் டாஸ்மாக் முன்பு ஆவேசமான குடிமகன்.. ‘இது டுபாக்கூர் சரக்கு..’ ஃபுல் போதையில் புலம்பல்
கடலூர்: தான் வாங்கி குடித்த மது போலி என்றும். உடலுக்கு கேடு விளைவித்துவிடும் என்றும் குற்றம்சாட்டிய போதை ஆசாமி ஒருவர், கடலூர் அருகே டாஸ்மாக் கடை பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. கடலூர் அருகே டாஸ்மாக்கில் மதுவாங்கிய குடிமகன், அதுபற்றி பேசிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் அவர் பேசுகையில்,மதுபானத்தை பொறுத்தவரை பச்சை கலர் சிம்பள் இருந்தால் மட்டுமே நாம் குடிக்கலாம். இது எம்பிசி.. கடைகளில் இதுபோன்ற டுபாக்கூர் சரக்கு தான் போடுறாங்க.. எனக்கு மாரடைக்கிறது.. எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது.நான் என்ன செய்வது? பாட்டில் ஒன்றாக இருக்கிறது. பிராண்ட் வேறயாக இருக்கிறது என்று புலம்பினார். முன்னதாக டாஸ்மாக்கில் விற்பனையாளர்களிடம் மதுவின் தரம் குறித்து கேள்வி எழுப்பி மல்லுக்கட்டினார். வரி கட்டும் தனக்கு பதில் அளிக்க வேண்டும் என்று முறையிட்டார். கேட்கிற பிராண்ட் சரக்குகள் கிடைப்பது இல்லை என்று அவர்களிடம் சண்டையிட்டார். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Share this content:
Post Comment