கோவை ரயில் நிலையத்தை நோக்கிப் படையெடுக்கும் வடமாநில இளைஞர்கள்.. காரணம் என்ன?

கோவை: இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான தேர்வு எழுத நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கோவை ரயில் நிலையத்தில் ஏராளமான வடமாநில இளைஞர்கள் குவிந்து வருகிறார்கள்.இதனால், கோவை ரயில் நிலையத்தில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. கோவை ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள்.இந்திய ராணுவத்தில் ராணுவ வீரர்கள், கிளர்க் உள்ளிட்ட பணியிடங்களுக்கு இன்று முதல் ஆள் சேர்ப்பு முகாம் கோவை அவிநாசி சாலையில் உள்ள போலீஸ் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.இதில் தமிழகம் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் இருந்து பலர் பங்கேற்க உள்ளனர். மொத்தம் 174 ராணுவ வீரர்கள், 50 கிளர்க் பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்படுகின்றன. இன்று முதல் வருகின்ற நவம்பர் 10-ம் தேதி வரை இந்த ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறும் எனவும் நாளொன்றுக்கு பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வரும் இளைஞர்களுக்கு தேதி ஒதுக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்து பல்வேறு மாநிலங்களில் இருந்து வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கோவை நோக்கி படையெடுத்துள்ளனர். மேலும் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வருகையை ஒட்டி கோவை ரயில் நிலையத்தில் அதிகளவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது.இன்னும் பத்து நாள்களுக்கு நடைபெறும் இந்த தேர்வில் வருகின்ற நாட்களில் அதிகளவில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து பல்வேறு பகுதியைச் சேர்ந்தவர்கள் கோவை நோக்கி வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்வுக்கு வரும் இளைஞர்கள் தமிழக அரசுக்கு வலியுறுத்துகின்றனர். மேலும் அவர்களுக்கு தங்கும் வசதி, உணவு வசதி, கழிப்பறை வசதி என அடிப்படை வசதிகளை கோவை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தித் தரவேண்டும் என்று வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share this content:

Previous post

குடியாத்தம் ரோட்டரி மாவட்டம் 3231: தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களுக்கான மார்பக புற்றுநோய் கண்டறியும் மொபைல் மேமோகிராபி பேருந்து பெற ரூ. 8.4 லட்சம் நிதி ஒதுக்கீடு

Next post

ரவீந்திரன் துரைசாமிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது திண்டிவனம் நீதிமன்றம்

Post Comment

You May Have Missed